பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவால் அவரது ரசிகர்கள் இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில், தற்போது அவர் கடைசி நேரத்தில் வீட்டில் இருந்து காரில் அமர்ந்து புறப்பட்டு செல்லும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் 46 வயதான புனீத் ராஜ்குமார் கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
இறப்பதற்கு முன்பு புனீத் ராஜ்குமார் தனது இரண்டு கண்களை தானம் செய்தார். இறந்த பிறகு பெங்களூருவிலுள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட கண்கள், 4 பேருக்குப் பொருத்தப்பட்ட. அதன் மூலம் புனீத் ராஜ்குமாரால் 4 பேர் பார்வை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அவர் கடைசி நேரத்தில் வீட்டில் இருந்து காரில் அமர்ந்து புறப்பட்டு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. புனீத்தும், அவரது மனைவி உதவியாளரிடம் காரின் சாவியை கேட்கின்றனர். உதவியாளர் வீட்டினுள் சென்று சாவியை கொண்டு புனீத்தின் கையில் கொடுத்துகிறார். பின்னர், புனீத்தும், அவரது மனைவி காரில் அமர்ந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் புனீத்தின் வீட்டு பார்க்கிங் ஏரியாவில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அது வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார், 48 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், சுமார்1800 மாணவ, மாணவியரின் கல்வி, என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் ரியல் லைஃப் சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்