கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் திஷா பதானி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் , ஆங்கிலம், உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷான் பணிகள் படுதீவிரமாக நடந்து வருகின்றன.
கங்குவா சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
கங்குவா படத்திற்கு கேரளா , ஆந்திரா தெலங்கானா ஆகிய மாவட்டங்களில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் கங்குவா படத்திற்கு தமிழக அரசு கூடுதல் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு கங்குவா படத்தின் முதல் காட்சி தொடங்க இருக்கிறது. 9 முதல் நள்ளிரவு 2 மணிவரை மொத்தம் 5 காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் லிமிடட் ஆஃபரைப் போல் படத்தின் முதல் நாள் ரிலீஸுக்கு மட்டுமே சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
கங்குவா திரைப்படம் முன்னதாக தீபாவளியை ஒட்டி வெளியாக இருந்து பின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் படம் வெளியாகும் போது தான் எங்களுக்கு தீபாவளி என தெரிவித்திருந்தார்கள். குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு கங்குவா படம் ஐந்து காட்சிகள் திரையிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது. சூர்யாவின் படம் திரையரங்கில் வெளியாகி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துள்ளன. கங்குவா திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு இன்னும் பெரிய கொண்டாட்டமான நிகழ்வாக அமைந்திருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்