தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. சிவா இயக்கியுள்ள இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். நாளை கங்குவா ரிலீஸ்:

Continues below advertisement

திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா ப்ரான்ஸிஸ் – கங்குவா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர்., ராக்கெட்ரி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். நடப்பாண்டில் சர்பியா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இரண்டரை ஆண்டுகள் காத்திருப்பு:

Continues below advertisement

சூர்யா நடிப்பில் எந்த படமும் கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதால் அவரது ரசிகர்கள் கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலரும், படத்தின் ப்ரமோஷனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

சூர்யாவிற்கு ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஆனால், திரையரங்கில் அவரது படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. நாளை கங்குவா படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றியை சூர்யா மிகப்பெரிய அளவில் நம்பியுள்ளார்.

படத்திற்கு சிக்கல்?

சிறந்த நடிகரான சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்தை தயாரித்துள்ளார். கங்குவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கங்குவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சொத்தாட்சியருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 20 கோடியையும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு செலுத்த வேண்டிய ரூபாய் 1.50 கோடியையும் செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தைச் செலுத்த இன்றே கடைசி நாள் என்பதால் தயாரிப்பு நிறுவனம் பணத்தை இன்றே செலுத்திவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.