பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் மூலம் பல்வேறு கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருபவர். குறிப்பாக மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசு எதிரான கருத்துக்கள் அவருக்கு பல்வேறு எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு ஒரு சிலரின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகி வந்தது.




 


கொரோனா பாதிப்பு சிகிச்சை முக்கியமானதாக ஆக்சிஜன் அளிக்கும் சிகிச்சை குறித்து அறிவியலுக்கு மாறான விஷயங்களை அவர் தனது ட்விட்டர் தளத்தில் முன்வைத்து வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் கங்கனா நடித்திருந்த நிலையில், இன்று திடீரென அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதற்காக கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ட்விட்டர் தரப்பில் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் கங்கனாவிற்கு ஆதரவாகவும், எதிர்பார்க்கவும் இரு தரப்பினர் மாறி மாறி ட்விட்டர் பதிவுகள் போட்டு வருகின்றனர்.