பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது அக்காவின் வாழ்கை யோகாவால் மாற்றம் கண்ட விதத்தை கதையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவரித்துள்ளார். 

Continues below advertisement


அவர் வெளியிட்ட பதிவில், “ அக்கா ரங்கோலிக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. ஆமா அப்ப அவளுக்கு 21 வயசு. ரோட்டு சைடுல நின்னுக்குட்டு இருந்த ஒருத்தன் அக்கா மேல ஆசிட் வீசிட்டான். அதுல அவளோட பாதி முகம் வெந்து போச்சு. ஒரு கண் பார்வையை இழந்துட்டா. ஆசிட் பட்டதுல அவளோட காது உருகிருச்சு. மார்பகங்களோட பல இடங்கள்ல தீக் காயங்கள்


அடுத்த இரண்டு மூன்று வருடங்கள்ல ரங்கோலிக்கு 53 அறுவை சிகிச்சைகள் நடந்துச்சு. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், என்னோட அக்கறை அவளோட மனநலம் சார்ந்துதான் இருந்துச்சு. காரணம் அந்த சம்பவத்துக்கு அப்புறமா அவ பேசவே இல்ல. என்ன நடந்தாலும்  அமைதியா பார்த்துக்கிட்டு உட்கார்ந்துருப்பா.


ஒரு ஏர் போர்ஸ் ஆபிசருக்கு அவள நிச்சயம் செஞ்சிருந்தோம். ஆனால் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு அப்புறமா அக்கா வோட முகத்த பாத்துட்டு போன அவரு திரும்ப வரவே இல்ல. அந்த சூழ்நிலையில கூட அவ பேசவே இல்ல. அவ கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல.


மருத்துவர் அவளுக்கு மென்டல் ஷாக் ஏற்பட்டுருக்குனு சொல்லி, அதற்கேற்ற சிகிச்சைகளை கொடுத்தாங்க. ஆனால் எதுவும் பலன் தரல. எனக்கு அப்போ 19 வயசு. நான் சூர்ய நாரயண் மாஸ்டர்க்கிட்ட யோகா கத்துக்கிட்டு இருந்தேன். அவ என்னோட பேசனும் அப்படினுங்கிற விஷயத்துல ரொம்ப தீவிரமா இருந்தேன். அதனால் நான் எங்க போனாலும் ரங்கோலியையும் அழைச்சுட்டு போயிருவேன்.


அப்படிதான் என்னோட யோகா கிளாஸூக்கும் அவள கூட்டிட்டு போனேன். அங்க அவ யோகா செய்ய ஆரம்பிச்சா.. அப்பதான் அவக்கிட்ட பெரிய அளவுல மாற்றம் ஏற்பட்டத பார்த்தேன். அதுக்கு அப்புறம் அவளோட வலிகளுக்கு அவ ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சா.. அப்படியே என்னோட ஜோக்குகளுக்கும் அவ ரெஸ்பாண்ட் பண்ணா.. அவளோட ஒரு பக்க கண் பார்வையும் திரும்புச்சு.. யோகாதான் உங்களோட எல்லா கேள்விகளுக்கும் பதில்.. அதுக்கு இப்பவாது ஒரு வாய்ப்பு கொடுங்க” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


 






நடிகை கங்கனா ரனாவத் பாலிவுடில் ‘குயின்’ ‘தனு வெட்ஸ் மனு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  ‘தாம் தூம்’ படத்தில் செண்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அழகு இருக்குமிடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பார்கள். அப்படிதான் கங்கனாவும். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், பாலிவுட் சினிமாவின் வாரிசு அரசியலை அக்குஅக்காக பிரித்தவர், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து விமர்சனங்களை சம்பாதித்துக்கொண்டார். அண்மையில் மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகான வன்முறை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிரந்தரமாக முடக்கியது.