பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத்(Kangana Ranaut) எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தன் கருத்துக்களை எந்தவித தயக்கமுமின்றி முன்வைப்பவர். அதுமட்டுமல்ல, பல நேரங்களில் கங்கனாவின் அறிவும், புரிதலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இணையத்தில் பெரும் விமர்சனங்கள் எழும். அப்படியான சர்ச்சை கருத்துக்களை பாரபட்சமில்லாமல் அள்ளித் தெளிப்பதில் கைதேர்ந்தவர் கங்கனா.
பாலிவுட் சினிமாவில் நிகவும் Nepotism - அதாவது பாலிவுட் சினிமாவில் உள்ள மிக பிரபலமான நட்சத்திரங்களின், புகழ், பெயரைப் பயன்படுத்தி அவர்களது உறவுகள் சினிமா துறைக்கு வருவது குறித்து கங்கனா எப்போதும் விமர்சித்ததுண்டு. கங்கனா, இந்தி சினிமா பிரபங்களின் வாரிசுகள் மகன்/மகள் என்பதற்காகவே மற்றவர்களைத் தவிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கனா குரல் கொடுத்துள்ளார். அந்த வகையில், கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கங்கனா அதைக்குறித்து கூறூகையில், “பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளிடம் பார்வையாளர்களை ஈர்க்கும், அவர்களிடம் இணைந்துபோதும் குணம் இல்லாமையே, ஹிந்தி திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படங்களிடம் தோற்றுப்போக காரணம்” என கூறியுள்ளார்
கொரோனா ஊரடங்கு காலம் முடிந்தநிலையில், வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் இந்தி திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் வெளியான சினிமா பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தன. ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப். 2 திரைப்படங்கள் ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. ஆனால், ஹிந்தியில் வெளியான சினிமாக்கள் பெரிதாக வசூல் ஆகவில்லை.
இதற்கு பார்வையாளர்களுடன்/ ரசிகர்களுடன் இளம் பாலிவுட் நட்சத்திரங்கள் பெரிதாக தொடர்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நடிப்பு இல்லை என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
உங்களைப் பொறுத்தவரையில் பாலிவுட் சினிமாவை விட, தென்னிந்திய சினிமா வெற்றியடைய காரணம் என்ன? ABP Live ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த கங்கனா, ”தென்னிந்திய நடிகர்களுக்கும் ரசிர்களுக்கும் இடையே எப்போதும் தொடர்பு இருக்கிறது. அது ரசிகர்கள் என்பதையும் தாண்டிய ஓர் பந்தம். இந்தி சினிமா துறையை பொறுத்தவரை, பிரபலங்களின் மகன்கள் வெளிநாடுகளுக்குப் படிக்க சென்றுவிடுகிறார்கள். அவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள்; ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். அவர்கள் கத்தி மற்றும் நைஃப் வைத்துதான் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அவர்களின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்களால், ஹிந்தி மக்கள், ரசிகர்களுடன் எப்படி தொடர்படுத்திக்கொள்ள முடியும்? இங்கிருக்கும் மக்களுக்கு இப்படிப்பட்ட நட்சத்திரங்களுடம் எப்படி தங்களுடன் இணைத்து தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்? பாலிவுட் வாரிசுகள் வேக வைத்த முட்டைகள் (boiled eggs) போல இருக்கிறார்கள்; நான் யாரையும் தவறாக சித்திகரிக்க வேண்டும் என்பதற்காக கூறவில்லை.” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்