திரைத்துறையை சேர்ந்தவர்கள் அரசியலில் களம் காண்பதும் வெற்றி வாகை சூடுவதும் காலம்காலமாக நடைபெற்று வரும் ஒன்று. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பல நட்சத்திர வேட்பாளர்கள்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக கட்சி பெருபான்மையை இழந்தாலும் ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் அதிக அளவிலான வெற்றியை  பாஜக கட்சி பெற்று வருகிறது.

கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் சார்பாக நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். கேரளாவில் லோக்சபா தொகுதியில் முதல்முறையாக பாஜக வெற்றி பெற்றது இதுவே முதல்முறை. இவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை தாண்டியும் அதிக வாக்கு எண்ணிக்கைகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


 




அதே போல் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக கட்சி சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கிய நடிகை ஹேமாமாலினி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகேஷ் தங்கரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை இடத்தை பிடித்தார்.

ஆந்திராவில் உள்ள பிட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக  நடிகரும், ஜனசேனா கட்சி நிறுவனருமான பவன் கல்யாண் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பவன் கல்யாண் அதன் மூலம் தன்னுடைய தொகுதியில் இரண்டாவது வலுவான கட்சியாக உருவெடுத்துள்ளார். அவரது வெற்றியை பல திரைபிரபலங்கள் கொண்டாடி வருகிறார்கள்.


 




ஆந்திர மாநிலம் இந்துப்பூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் நந்தமுரி பாலகிருஷ்ணா 107250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகை நவ்நீத் ரவி ராணா இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். பிரச்சாரத்தின் சமயத்தில் "ஜெய் ஸ்ரீராம் சொல்ல முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்" என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.