Watch Video : Kamalhassan: ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை... ஷாருக்கான் பற்றிய உண்மையைச் சொன்ன கமல்ஹாசன்

ஹே ராம் படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகும் நிலையில் அந்தப் படத்தில் நடித்த ஷாருக்கான் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

Continues below advertisement

கமல்ஹாசனின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக அவரது ரசிகர்களால் கருதப்படுவது ஹே ராம் திரைப்படம். இந்தப் படத்தின் மேல் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மற்றொரு தரப்பில் இன்றுவரை பாராட்டுக்களைப் பெற்று வரும் திரைப்படம் ஹே ராம். ஹே ராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுட இணைந்து நடித்த ஷாருக் கான் பற்றிய ஒரு சுவாரஸ்யமானத் தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்

Continues below advertisement

திரையரங்குகளில் தோல்வியடைந்த ஹே ராம்

ஹே ராம் திரைப்படம் கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்தது. கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உருவான திரைப்படம் ஹே ராம். மேலும் இத்தனைப் பொருட்செல்வில் உருவாகும் படத்திற்கு போதுமான வரவேற்பு இருக்குமா என்கிற கேள்வியும் இருக்கவே செய்தது. அதே மாதிரி படம் வெளியான சமயத்தில் படத்தின் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள் காரனமாக திரையரங்குகளில் தோல்வியடைந்தது ஹே ராம் திரைப்படம்.

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத ஷாருக்கான்

படத்தில் அம்ஜத் கான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாருக் கான். பாலிவுட்டில் தனது நடிப்பு வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார் ஷாருக்கான். ஹே ராம் படத்தில் நடிக்க சம்மதித்ததுடன் அந்த படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாக வாங்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் கமல்ஹாசன். ” ஷாருக் கானை அனைவரும் ஒரு வணிக நோக்கம் கொண்டவராகவே பார்க்கிறார்கள். இந்தத் தகவலை நான் சொன்னால் பெரும்பாலானவர்கள் நம்பாமல் இருக்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஹே ராம் படத்தின் கதையை நான் அவரிடம் சொன்னபோது அவர் உடனே இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது மட்டுமில்லாமல் சம்பளம் வாங்கவும் மறுத்துவிட்டார். ஏதாவது ஒரு வகையில் இந்தக் கதையில் தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். “ என்று கமல் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்தின் இந்தி பிரதியின் உரிமத்தை மீட்டு வாங்கியுள்ளார் ஷாருக் கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹேராம்

ஹேராம் திரைபப்டம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியானது. கமல்ஹாசன், ஷாருக் கான், வசுந்தரா, அதுல் குல்கர்னி, ராணி முகர்ஜீ ஆகியவர்கள் நடித்திருந்தனர். இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola