கமல்ஹாசன்:

கோலிவுட் திரையுலகின் 2 ஜாம்பவான்கள் ஒன்றிணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'. நாயகன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் கமல் - மணிரத்னம் ஆகிய இருவரும் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின்னர்   'தக் லைஃப்' திரைப்படத்தின் மூலம் கை கோர்த்துள்ளனர். 70 வயதிலும், வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் கமல்...   'தக் லைஃப்' திரைப்படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கராக தன்னுடைய அதிரடியானை நடிப்பு, ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் கலக்கிய சீன்களை, கட்டாயம் வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.

மணிரத்னம் இயக்கம்:

தமிழ் சினிமாவில் உள்ள லெஜெண்ட் இயக்குனர்களில் ஒருத்தர் தான் மணிரத்னம். இவர் எடுக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்த பின்னர், இவர் கமல் ஹாசனை கேங் ஸ்டாரா வைத்து தற்போது இயக்கி உள்ள திரைப்படம் தான், 'தக் லைஃப்'. இந்த படத்தின் கதைக்களத்தை அவர் எப்படி கொண்டு சென்றுள்ளார். சுவாரஸ்யமான காட்சிகள் உள்ளதா, இதற்க்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கேங் ஸ்டார் படத்துக்கும் இந்த படத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்.

சிம்பு - கமல்ஹாசன் காம்போ:

'தக் லைஃப்' திரைப்படத்துல கமல்ஹாசனுக்கு நிகரான வேடத்தில் அமர் என்கிற கதாபாத்திரத்தில் தான் சிம்பு நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசனின் உயிரை சிம்பு காப்பாற்றியதால், அவரை தன்னுடைய மகனாகவே கமல் வளர்க்கிறார். கமல் ஜெயிலுக்கு போகும் கேப்பில் சிம்புவுக்கு கமல்ஹாசனின் பவர் வந்து சேர்கிறது. அதே போல் கமல்ஹாசன் சிம்புவை சந்தேகப்படும் சூழல் ஏற்பட... சிம்பு - கமல் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளதை கட்டாயம் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும். 

நட்சத்திர பட்டாளம்:

'தக் லைஃப்' திரைப்படத்தில் கமல்ஹாசன் - சிம்பு உட்பட ஏராளமான நட்சத்திரங்களை மணிரத்னம் நடிக்க வைத்துள்ளார். குறிப்பாக த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் , ஐஸ்வர்யா லட்சுமி , அசோக் செல்வன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரபலங்கள் என்பதால்... இந்த படம் திரையில் பார்க்க ஒரு ஒர்தானா படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்க படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசை:

இசை புயலின் இசை, 'தக் லைஃப்'  திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. குறிப்பாக ஜிங்குசான், முத்த மழை, மற்றும் சுகர் பேபி ஆகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பாடல்களை தாண்டி, படத்தின் BGM இசையும் அதிகம் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுவதால்.... இதனை வெறித்தனமான சவுண்ட் எபெக்ட்டுடன் வெள்ளித்திரையில் பார்த்து ரசித்தால் தாறுமாறாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.