இந்தியன் 2


இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


கடந்த 5 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த இப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கமல், சித்தார்த் , எஸ்.ஜே சூர்யா , காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் , பிரியா பவானி சங்கர் , பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய கமல் பல்வேறு சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 


"நான் தமிழன். நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இங்க பிரிச்சு விளையாடலாம்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர். நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதிகாக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும்" எனப் பேசினார்.


ஸ்ருதி மனசு வெச்சா இப்போவே தாத்தா 


தனது மகள் ஸ்ருதி ஹாசனின் திருமணத்தைப் பற்றிய பேச்சை சூசகமாகப் பேசிய கமல். “ஸ்ருதி எல்லாம் மனசு வெச்சிருந்தா நான் இப்போவே தாத்தாதான் " என்று மேடையில் பேசினார்


கடவுள் இல்லாமல் இருந்திடலாம்


கடவுளைப் பற்றி கமல் பேசாத மேடை உண்டா? இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் பேசிய கமலின் ஃபிலாசஃபி இதுதான் "என்னைப் போன்ற பகுத்தறிவாளிகள் கடவுள் இல்லாமல் இருந்திடலாம், ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்பே சிவத்தில் அன்பு தான் முதன்மை" எனக் கூறியுள்ளார். 


அழுது அடம்பிடித்த டி ஆர்


“இந்தப் படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. இந்தப் படத்துல வேலை பார்த்த என்னுடைய நண்பர் இறந்துவிட்டார். அதே போல் விவேக் மனோபாலா இல்லாதது உங்களுக்கு எல்லாம் ஒரு குறையாக இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் அந்த குறை உங்களுக்கு இருக்காது.  எல்லா பிரச்சனைகளையும் கடந்து இன்னைக்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு சந்தோஷம். நான் ஒருமுறை நடிக்க மாட்டேன் என்று சொன்னபோது டி.ஆர் சார் என் ரூமுக்கு வந்து “இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது” என்று அழுது என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு போனார்” என சுவாரஸ்யத் தகவல் பகிர்ந்துள்ளார்




மேலும் படிக்க : Shankar: ”கெட்டவங்களுக்கு மிக மோசமான வில்லன்” - இந்தியன் தாத்தா ரீஎண்ட்ரிக்கு செம ஹைப் கொடுத்த ஷங்கர்


Bobby Simha: பாய்ஸ் படத்தில் நிறைவேறாத ஆசை இப்போ நிறைவேறி இருக்கு.. இந்தியன் 2 விழாவில் பாபி சிம்ஹா உருக்கம்