தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து அறிவித்த பின் ஜெயம் ரவி என்கிற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் யோகி பாபுவை வைத்து தனது முதல் படத்தை இயக்கவிருப்பதாகவும் நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வந்தது. இப்படியான நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளார் . இதன் திறப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது
ரவி மோகன் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவுக்கு முன்பு பாடகி கெனிஷாவுடன் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வந்தார் ரவி மோகன் .மேலும் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரை நட்சத்திரங்கள் மற்றும் அசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார் அவர். கமல் , கார்த்தி , நடிகை ஜெனிலியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்
மனைவியுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் தற்போது தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார் ரவி மோகன். சினிமாவில் தான் இதுவரை சம்பாதித்த அனைத்தையும் தனது மனைவி ஆர்த்தியிடமே அவர் விட்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது புது வீடு , புது தயாரிப்பு நிறுவனம் என தனது வாழ்க்கையை மறுபடியும் முதலில் இருந்து கட்டமைத்து வருகிறார்
வீடு ஜப்தி
மறுபக்கம் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்திருந்த போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாங்கிய பங்களா தற்போது வங்கி நிர்வாகிகளால் ஜப்தி செய்யப்பட இருக்கிறது. கடந்த 10 மாதங்களாக தவணை செலுத்தாததால் எச்.டி.எஃப்.சி வங்கி ரவி மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் ரவி மோகன் தரப்பில் இருந்து இந்த நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
ரவி மோகன் நடிக்கும் படங்கள்
ரவி மோகன் நடிப்பில் தற்போது ஜீனி திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இது தவிர்த்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார். டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் கராத்தே பாபு திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது .