கமல்ஹாசன்
எல்லா காலமும் ரசிகர்களால் கொண்டாட படுபவர் உலகநாயகன் கமல்ஹாசன் . ஆனால் சில நேரங்களில் திரையரங்குகளில் அவர் படங்கள் எதிர்பார்த்த வசூல் வராமல் தத்தளித்த காலங்களையும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கமல்ஹானுக்கு மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் . இந்த ஆண்டு அடுத்தடுத்தப் படங்களில் கமல் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்கு பெரும் தொகை அவருக்கும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த படங்களுக்கு கமல் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்கிற தகவல்களைப் பார்க்கலாம் ;
கல்கி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து கடந்த ஜூன் மாதம் வெளியான படம் கல்கி 2898 ஏடி. இப்படத்தில் சுப்ரீம் யாஸ்கின் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 600 கோடி பட்ஜெட்டி உருவாகியது. படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகளவில் 900 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் படம் 1000 கோடி வசூல் இலக்கை எட்ட இருக்கிறது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசன் 40 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்திய 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், ஆர்த்தியாக பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், இன்ஸ்பெக்டராக நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், தம்பேஷ், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, பியூஷ் மிஸ்ரா மிஸ்ரா, ஜெயபிரகாஷ், ஜி. மாரிமுத்து, ஜார்ஜ் மேரியன், வினோத் சாகர், யோகராஜ் சிங், ரேணுகா, கல்யாணி நடராஜன், சி. ரங்கநாதன், பெனடிக்ட் காரெட், ரவி வெங்கட்ராமன், சேரன்ராஜ், மற்றும் டெமி-லீ டெபோ உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல்ஹாசன் 150 கோடிவரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தல் லைஃப்
கமலின் 234 ஆவது படமாக உருவாகி வருகிறது தக் லைஃப் . கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்கிறார். த்ரிஷா , சிம்பு , அசோக் செல்வன் , ஐஸ்வர்யா மேனன் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு கமல்ஹாசன் 100 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.