இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், வெப்சைட்டுகளுக்கும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 


கடும் எச்சரிக்கை 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடஃபோன், ரிலையன்ஸ் உட்பட 29 இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கும்,1000 த்துக்கும் மேற்பட்ட வெப்சைட்டுகளுக்கும் விக்ரம் படத்தை தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியில்லாமல் நகலெடுக்கவோ அல்லது திரையிடவோ கூடாது என்று உத்தரவிட்டது.


இந்த நிலையில் தற்போது கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் நிறுவனம் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விக்ரம் படத்தை திரையிடவோ அல்லது நகலெடுக்கவோ முயற்சி செய்யும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வெப்சைட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளது.


 






கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. டிரெய்லர் வெளியானபோதே, படத்தில் சூர்யா நடித்துள்ளதாக ரசிகர்கள் கணித்தனர். 


 



விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவின. அந்த செய்தியை நிஜமாக்குவதுபோல, அந்த நிகழ்ச்சிலேயே படத்தின் இயக்குநர் லோகேஷ் சூர்யா நடித்திருப்பதை உறுதி செய்தார். இந்த நிலையில், விக்ரம் படத்தின் மூன்றாம் உருவாக இருப்பதாகவும், அதற்கான காரணமாக சூர்யா இருப்பார் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.