உலக நாயகன், ஆண்டவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். 1960 ஆம் ஆண்டு திரைக்கு வந்த களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதோடு ஹீரோவாக நடிப்பதற்கு முன்னதாக ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மாணவன், அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பருவ காலம், குமஸ்தாவின் மகன், நான் அவனில்லை, அன்பு தங்கை, அவள் ஒரு தொடர் கதை, சினிமா பைத்தியம், பட்டாம் பூச்சி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் 10 அவதாரங்களில் நடித்த ஒரே ஒரு நடிகர் கமல் ஹாசன் தான். அந்தளவிற்கு சினிமா மீது அன்பும், காதலும் கொண்டவர். சினிமா தான் உலகம் என்று வாழ்ந்து வருவதாக பலமுறை தெரிவித்துள்ளார். 250-ஆவது  படத்தை நெருங்கி வரும் கமல்,  நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குநர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார்.

இந்த நிலையில் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கடந்த 1978 ஆம் ஆண்டு பரதநாட்டிய கலைஞரான வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் திருமண வாழ்கைக்கு பிறகு இருவரும் 1988ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்துக்கு காரணம், சரிகாவுடன் வைத்திருந்த ரசிய தொடர்பு என்றே கூறப்படுகிறது. விவாகரத்து பெற்று பிரிந்து கையேடு கர்ப்பமாக இருந்த நடிகை சரிகாவை திருமணம் செய்தற்.

கமல் - வாணி இருவரும் விவாகரத்து பெற்று 37 ஆண்டுகள் ஆன போதும் கூட வாணி கணபதி இன்னமும் கமல் ஹாசனின் குடும்பத்தினருடன் உறவில் இருந்து வருகிறார். என்பது ஆச்சர்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கமல் ஹாசன் உடன் பேசுகிறாரா? இல்லையா என்ற தகவல் இல்லை என்றாலும் கூட அவரது அண்ணன் மகள்களான அனு ஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோர் உடன் உறவாடி வருகிறார். இது தொடர்பான சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டால்... முன்னாள் கணவருடனோ அல்லது கணவர் வீட்டாரோடனும் எந்த உறவிலும் இருக்கமாட்டார்கள்.  ஆனால் வாணி கணபதி தற்போது வரை கமல் குடும்பத்துடன் நல்ல உறவோடு இருப்பது... வாணி கமலின் குடும்பத்தினர் மீது வைத்துள்ள பாசத்தை உணர முடிகிறது.