கர்நாடகாவில் தக் லைஃப் ஒத்திவைப்பு


கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என கமல் கூறியது கர்நாடகா மொழி மற்றும் கலாச்சார அமைப்புகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் பொது மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படத்தை வெளியிட முடியும் என கன்னட திரைப்படம் மற்றும் வனிக சபை கமலுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டமாக கூறிவிட்டார்.   இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை  வெளியிடவும் படம் வெளியாகும் நாளன்று திரையரங்கில் பாதுகாப்பு வழங்கும்படியும் கர்நாடகா உயர்  நீதிமன்றத்தில் கமல்  ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விசாரணையின் முடிவில் கன்னட திரைப்பட சபையுடன் கமல் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வருவது வரை கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Continues below advertisement


கமல் vs உயர் நீதிமன்றம்


வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா முதலமர்வில் கன்னட மொழி குறித்த கமலின் கருத்தை கடுமையாக விமர்சித்தார். 'மொழி பற்றி பேச நீங்கள் என்ன மொழி வல்லுநரா" என அவர் கேள்வி எழுப்பினார். கமலின் கருத்தால் கன்னட மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும் கமல் மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என நீதிபதி தெரிவித்தார். இதனிடையில் கன்னட திரைப்பட சபைக்கு கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கன்னட மொழி தவிர்த்து அனைத்து மொழிகளின் மீதும் தனக்கு பெரிய மதிப்பு இருப்பதாக கமல் இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். 


மத்திய உணவிற்கு பின் பிற்பகல் 2 : 30 மணிக்கு தொடங்கிய அமர்வில் கமல் தரப்பு வழக்கறிஞர் சின்னப்பா மற்றும் நீதிபதி இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. கமலின் அறிக்கையை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சின்னப்பா படித்தார்.


நீதிபதி : "இந்த அறிக்கையில் மன்னிப்பு என்கிற வார்த்தையே இடம்பெறவில்லையே ?" 


வழக்கறிஞர் : கன்னட நடிகரை வரவேற்க சொன்ன கருத்தில் தவறு என்று சொல்லமுடியாது. 


நீதிபதி : ஆனால் அவரது கருத்தால் ஏற்பட்ட பின்விளைவு ?


வழக்கறிஞர் : கன்னட மொழி மீது தனக்கு இருக்கும் அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 


நீதிபதி : அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் கேட்பதெல்லாம் இந்த கடிடத்தில் மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை மட்டுமே


வழக்கறிஞர் : தீவறாக பேசியிருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க முடியும் 


நீதிபதி : நீங்கள் உங்கள் ஈகோவை பிடித்துக் கொண்டு நிற்கிறீர்கள். உங்களது கருத்து தான் மக்களை புண்படுத்தி இருக்கிறது. உங்களுடைய மன்னிப்பு தான் அதை சரி செய்ய முடியும் . இந்த விளக்கத்திற்கு பதிலாக  என்றால் ஏன் ஒரு மன்னிப்பு கேட்டு இதை முடிக்கலாமே


வழக்கறிஞர் : இது விளக்கம் இல்லை. கமல் தனது கருத்தை நியாயப்படுத்தவில்லை . இது ஒரு அறிக்கை. நான் ஒன்று சொல்ல வேண்டும். கலை காத்திருக்கலாம் என்பது அவரது எண்ணம். பிரச்சனை தீரும் வரை கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஒத்திவைக்கப்படும்


கடைசி வரை கமல் மன்னிப்பு கேட்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது ரசிகர்களிடம் பாராடுக்களைப் பெற்று வருகிறது.