Gopi Sudhakar: வைரலாகும் இந்தியன் 2 பரிதாபங்கள் வீடியோ... கோபி சுதாகர் மேல் கடுப்பான கமல் ரசிகர்கள்

இந்தியன் 2 படத்தை வைத்து பரிதாபங்கள் வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர் மீது கமல் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்

Continues below advertisement

இந்தியன் 2 

கமலின் இந்தியன் 2 படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகியது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப் பட்டது. படத்தின் திரைக்கதை , இசை , நடிகர்களின் நடிப்பு என எந்த அம்சமும் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. திரையரங்கில் சுமாரானா ஓட்டத்திற்கு பின் சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் காட்சிகளை எக்ஸ் தளத்தில் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்ஸ்.

Continues below advertisement

கோபி சுதாகர் வெளியிட்ட இந்தியன் 2 பரிதாபங்கள்

பிரபல யூடியுபர்களான கோபி சுதாகர் சமீபத்தில் இந்தியன் 2 பரிதாபங்கள் வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோவில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமல் முதல் சித்தார்த் பேசும் சோசியல் மீடியா வசனம் , கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்து பிஜிஎம் போட்ட அனிருத் என எல்லாரையும் ரோஸ்ட் செய்துள்ளார்கள் கோபி சுதாகர் டீம். தற்போது சமூக வலைதளம் முழுவதும் இந்தியன் 2 பரிதாபங்கள் வீடியோதான் வைரலாகி வருகிறது. 

கடுப்பான கமல் ரசிகர்கள்

படம் நன்றாக இருக்கோ இல்லையோ முட்டுக் குடுக்க வேண்டியது தானே எந்த ஒரு ரசிகரின் கடமையும் . அந்த மாதிரிதான் இந்தியன் 2 படத்திற்கு கமல் ரசிகர்கள் முட்டுக் குடுத்து வருகிறார்கள். தற்போது கோபி சுதாகர் வெளியிட்ட இந்தியன் 2 பரிதாபங்கள் வீடியோ வைரலான நிலையில் கோபி மற்றும் சுதாகர் ஆகியவர்களின் சமூக வலைதள கணக்கை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் யாரிடமோ பணம் வாங்கிக் கொண்டுதான் இவர்கள் இப்படி வீடியோ வெளியிட்டுள்ளார்கள் என்று கோபி சுதாகர் மீது விமர்சனங்களும் முன்வைக்கப் படுகின்றன. ரஜினியோ கமலோ படம் நல்லா இல்லை என்றால்  ட்ரோல் செய்வது வழக்கம்தானே. வை எமோஷன் ப்ரோ என்று இன்னொரு பக்கம் நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள் 

Continues below advertisement
Sponsored Links by Taboola