மலையாளத்தை கடந்த ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான லோகா திரைப்பட இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அதிக வசூல் ஈட்டிய மலையாள படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக லோகா திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
மலையாள சினிமாவில் சாதனை படைத்த லோகா
மலையாள பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து இந்த ஆண்டு வெளியான எம்புரான் திரைப்படம் உலகளவில் ரூ 265 கோடி வசூலித்தது. மலையாள சினிமா வரலாற்றிலேயே உலகளவில் அதிக வசூல் ஈட்டிய படமாக எம்புரான் திரைப்படம் சாதனை படைத்தது. இந்த சாதனையை ஒரே ஆண்டில் லோகா திரைப்படம் முறியடித்துள்ளது. 22 நாட்களில் லோகா திரைப்படம் ரூ262.5 கோடி வசூலித்திருந்தது. வார விடுமுறை நாட்களுக்கான முன்பதிவில் லோகா படம் எம்புரான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இதமூலம் உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய அதுவும் பெண் கதா நாயகியை மையப்படுத்திய படமாக லோகா திரைப்படம் மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது .
லோகா படத்தை முதலில் ஒரு வெப் சீரிஸாக இயக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. பின் ஒவ்வொரு பாகத்தையும் திரைப்படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்த பாகங்களில் துல்கர் சல்மான் , டொவினோ தாமஸ் ஆகியோர் சூப்பர் ஹீரோக்களாக நடிக்க இருக்கிறார்கள். லோகா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதிக வசூலீட்டிய மலையாள படங்கள்
கடந்த இரு ஆண்டுகளில் மலையாள திரைப்படங்களின் மார்கெட் உலகளவில் மிகப்பெரிய அளவு வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்தடுத்த படங்கள் பான் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று புதுப்புது வசூல் சாதனையை உருவாக்கி வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படமாக சாதனை படைத்தது. உலகளவில் இப்படம் 240 கோடி வசூல் செய்தது. இந்த ஆண்டு மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் உலகளவில் ரூ 234.5 கோடி வசூல் செய்தது. 2023 ஆம் ஆண்டு டொவினோ தாமஸ் நடித்த '2018 ' திரைப்படம் உலகளவில் ரூ 180 கோடி வசூல் செய்தது. பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் ரூ 157. 35 கோடி வசூல் செய்தது. இந்த படங்களே மலையாளத்தில் தற்போது அதிக வசூல் ஈட்டிய பட்டியலில் இடம்பிடித்துள்ளன.