நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ள கல்கி 2898 AD  படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தமிழ், இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் உலக அளவில் முதல் நாளில் 191 கோடி வசூலித்தது. தற்போது படம் வெளியாகி ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை தயாரிப்பு நிறுவனம். அதன்படி கல்கி படம் முதல் ஐந்து நாட்களில் உலகளவில் 625 கோடி வசூலித்துள்ளது என்பதை செய்தியாளர் குறிப்புடன் பகிர்ந்துள்ளது படக்குழு. 


 


Kalki 2898 AD 5th day collection : பட்டையை கிளப்பும் கல்கி 2898 AD பாக்ஸ் ஆபீஸ் வசூல்... 5 நாளில்  உலகளவில் இத்தனை கோடியா?



பத்திரிக்கை வெளியிட்ட குறிப்பின் படி உலகளவில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் அனைத்து மொழிகளையும் சேர்த்து 625 கோடி வசூலித்துள்ளது. திங்களன்று மட்டுமே 70 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. இந்தி வர்ஷன் சுமார் 20 கோடியும், வட இந்தியாவில் 135 கோடியும் வசூல் செய்துள்ளது. கல்கி 2898 AD திரைப்படம் நிச்சயம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


 


கல்கி 2898 AD திரைப்படம் பான் இந்திய படமாக அனைத்து மொழிகளிலும்  உலகெங்கிலும் வெளியானாலும் தெலுங்கு மற்றும் இந்தி வர்ஷன் மிகவும் சிறப்பாக வசூல் செய்து வருகிறது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளனர் என செய்திக்குரிய குறிப்பிடுகிறது.