நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 AD '. தமிழ், இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலகளவில் 700 கோடியையும் தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் பிரபலமான வர்த்தக போர்டல் சாக்னிக் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் படி கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளில் ரூ 95.3 கோடியும், 2வது நாளில் ரூ 59.3 கோடியும், 3வது நாளில் ரூ 66.2 கோடியும், 4வது நாளில் ரூ 88.2 கோடியும், 5வது நாளில் ரூ 34.15 கோடியும், 6வது நாளில் ரூ 27.05 கோடியும் வசூலித்துள்ளது. ஆகவே 7ம் நாள் படத்தின் மொத்த இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 393.4 கோடியை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்கி 2898AD படம் வெளியான 7 நாட்களில் உலகளவில் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 700 கோடியை தாண்டியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் இதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.