பொதுவாகவே தர்மம் என வந்துவிட்டால் வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக்கூடாது என பெரியோர்கள் சொல்வார்கள். அதைத் தான் நடிகர் விஜய்யும் பின்பற்றுகிறார் என நெகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் நடிகர் காக்கா கோபால்.
தமிழ் சினிமா உலகில் காக்கா கோபாலை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகர் ஜீவா நடித்த ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்கின் நண்பராக கோபால் படத்தில் பின் இவர் மாதவனின் ரன் படத்திலும் காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்ற காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ரமேஷ்கண்ணாதான். இதனை தொடர்ந்து இவர் சில பல படங்களில் தான் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காக்கா கோபால் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார். அதில் நடிகர் விஜய் குறித்து யாரும் அறியாத பல செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்க்காதோர் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அந்தப் படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனபின்னரும் கூட இன்றும் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் யாரும் பார்க்காமல் இருப்பதில்லை. அப்படிப்பட்ட படத்தில் நடித்தவர் பாரி வெங்கட். இன்று சென்னை ராயப்பேட்டை மணிக் கூண்டைப் பார்த்தால் பாரி வெங்கட் நினைவில் வந்து செல்வார். வெளியூரில் இருந்து புதிதாக சென்னை வரும் நபருக்கு பாரி வெங்கட் ராயப்பேட்டை மணிக்கூண்டு செல்ல வழி சொல்வார். அந்த காமெடி இன்றளவு ரொம்பவும் பிரபலம்.
அந்த காமெடியில்’ மணிக்கூண்டுக்கு எப்படி போனும் என கேட்பவரிடம்’ டவுசர் பாண்டி’ அட்ரஸ் கேட்ட நபரை நடுரோட்டில் அமரவைத்து மேப் வரைந்து’ போக வேண்டிய இடத்தை சொல்லி, கடைசியில நீ கேட்ட மணிக்கூண்டு இங்கேத்தான் இருக்குனு சொல்வார். அதற்கு ஃபீஸ் வேறு வாங்கிக் கொள்வார். இந்த காமெடி அப்போது செம ஹிட். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய்க்கும் பிடித்த காமெடி இது. உண்மையில் சொல்லப்போனால் வாழ்க்கையில் நாமும் இப்படித்தான் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு எங்கெங்கோ எதை எதையோ தேடி அலைவோம்.
அந்தக் காமெடியில் டவுசர் பாண்டி கேரெக்டரில் நடித்தவர் தான், காமெடி நடிகர் பாரி வெங்கட். பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
இவர் ’திருநெல்வேலி’ படத்தில் நடித்து’ ஷூட்டிங் முடிந்து திரும்பினார். ஆனால், ஸ்பாட்டில் இருந்து புறப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அவர் வீட்டுக்கு போகவில்லை. குடும்த்தினர கதற சக காமெடியன்கள்’ அவரை தேடினர். அப்போதுதான் ஷூட்டிங் முடிந்து திரும்பும் போது பெரம்பலூர் அருகில் நடந்த விபத்தில் பாரி வெங்கட் இறந்ததே தெரியவந்தது.
சக காமெடி நடிகர்கள் சேர்ந்து அவருடைய உடலை மீட்டு சென்னையில் முறைப்படி சடங்குகள் செய்து இறுதி மரியாதை செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பாரி வெங்கட் இறந்த செய்தி விஜய்க்கு தெரியவர, உடனே’ விஜயும், அவரது தந்தை இயக்குநர் சந்திரசேகரும் சென்னை தி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாரி மனைவியிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துட்டு, அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றனர் என்ற தகவலை காக்கா கோபால் தெரிவித்தார்.
ஏற்கெனவே தாடி பாலாஜியும் தனக்கு விஜய் உதவியதைப் பற்றிக் கூறியிருந்தது இங்கு நினைவுகூறத்தக்கது. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதபோது, விஜய் தெரிந்து கொண்டு’ மருத்துவமனைக்கு வந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்துச் சென்றதை தாடி பாலாஜி, விஜய் டிவி ஷோவில் கூறியிருந்தார்.