இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதியில் இடம் பெற்ற டில்லி கதாபாத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர்கள் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கபடி ப்ளேயர்..
படத்தில் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை உருவாக்கமும், அவரின் முந்தையப் படத்தை இந்தப்படத்துடன் கனெக்ட் செய்தததும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த நேர்காணல் ஒன்றில், கைதி படத்தில் கார்த்தி நடித்த டில்லி கதாபாத்திரம் ஒரு கபடி ப்ளேயர் என்றும் அவர் கையில் வைத்திருந்த கட்டைப்பையில் சிறையில் கபடியில் போட்டிகளில் வென்ற கப்புகளை வைத்திருந்தார் என்றும் அந்தக் கதாபாத்திரத்தை வைத்து இன்னொரு கதை சொல்ல வேண்டி இருப்பதால் அவர் பையில் இருந்த கப்புகளை கைதியில் காட்டவில்லை என்றும் கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேட்டியின் மூலம் கைதி 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
விக்ரம் வசூல் விவரம்..
வசூலிலும் பல சாதனைகளை படைத்துவரும் ‘விக்ரம்’ முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக ஓடி 140.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூலின் மூலம் முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விக்ரம் 2 ஆம் இடத்தை பிடித்ததோடு விஜய் நடித்த பிகில் படத்தின் முதல்வார வசூலையும் முறியடித்து இருக்கிறது.
முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் தோராயமாக 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டும் முதல்வாரத்தில் விக்ரம் திரைப்படம் 98 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.