ஏப்ரல் 13 ம் தேதி மாயமான கைலாசா அதிபர் நித்யானந்தா, கடந்த ஜூலை 13 ம் தேதி நேரில் தோன்றி, குருபூர்ணிமா அருளாசி வழங்கினார். குருபூர்ணிமா ஆசியை விட, தான் ஏன் இத்தனை மாதங்கள் ஆசி வழங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தார் நித்யானந்தா.


மூன்று மாத இடைவெளி விட்டு வந்ததால் என்னவோ, மூன்று விதமாக கெட்டப் உடன் அவர் தோன்றி, பல மணி நேரங்கள் நேரலையில் இருந்தார். இந்த 3 மாதங்கள் தனக்கு பெரிய மாற்றத்தை அளித்திருப்பதாகவும் இந்த மாற்றத்தை இனி நீங்களும் உணர்வீர்கள் என்று பேசிய நித்யானந்தா, தன்னிடம் அனைத்தும் மாறிவிட்டதாகவும், அனைத்தும், அனைத்தும் என அழுத்தி அழுத்தி கூறிய நித்யானந்தா, இன்னும் சில நாட்களில் அதை நீங்கள் அனைவரும் உணர்வீகள் என்று அடிக்கடி அழுத்தி அழுத்தி கூறிக் கொண்டே இருந்தார். 




ஆனால், தமிழ்ஆசி வழங்கும் போது,அது தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை. மாறாக, தான் அனுபவித்த சமாதி நிலை பற்றி மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த நாட்களில் தனது ஆசி வழங்கும் நிகழ்வில் நிறைய பேச இருப்பதாகவும், பேசுவதற்கு நிறைய இருப்பதாகவும் கூறிய நித்யானந்தா, மூன்று மாத சமாதி நிலைக்குப் பின் கண் திறந்து பார்த்தால் உலகமே மாறிவிட்டதாகவும், ‛என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க...’ என்றும், அவர் பேசினார். 


நித்யானந்தா பேசி முடிக்கும் போது, இதை கூறி தான் நிறைவு செய்தார். அதுவரை பேசுவது நித்யானந்தா தானா என்கிற சந்தேகம் இருந்த நிலையில், அவரது குசும்பு பேச்சோடு நிறைவு செய்த பிறகு தான், பேசியது நித்யானந்தா தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது. 




ஜூலை 13ம் தேதிக்குப் பின் நித்யானந்தா எப்போது வருவார், என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், ஜூலை 16 அன்று ஒரு பேஸ்புக் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. அதில், வழக்கமான அவரது அக்மார்க் அன்லிமிடட் சிரிப்போடு, மீண்டும் வந்துவிட்டேன்... மீண்டு வந்துவிட்டேன்...’ என்று சிரித்தபடி கூறி , ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


இதோ நித்யானந்தா வெளியிட்ட வீடியோ ரீலின் லிங்... க்ளிக் செய்து பார்க்கலாம்!


அதை புகழ்பெற்ற KGF படத்தின் பின்னணி இசையை கோர்த்து, தன்னை KGF யாஷ் போல சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அந்த ரீல் வீடியோவை அவரை பின்தொடர்வோர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த 3 மாதத்தில் வெளியான இன்னும் பல படங்களை நித்யானந்தா பார்த்தால், அவற்றில் பின்னணி இசையிலும் ரீல்ஸ் வரலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது இன்னுமொரு கூட்டம்.