Kabir Duhan Singh: அஜித்தின் வில்லன்... வேதாளம் நடிகருக்கு திருமணம்... குவியும் வாழ்த்துகள்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் கபீர் துஹான் சிங், கிக் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 

Continues below advertisement

வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் கபீர் துஹான். மாடலிங்கில் தன் பயணத்தைத் தொடங்கிய கபீர், மும்பையைச் சேர்ந்தவர்.

Continues below advertisement

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் கபீர் துஹான் சிங், கிக் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 

தொடர்ந்து அதே ஆண்டில் தமிழில் முதல் படத்திலேயே நடிகர் அஜித்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் நடித்தார் கபீர். அதன் பின் றெக்க, காஞ்சனா 3, அருவம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் , 50க்கும் மேற்பட்ட தென்னிந்தியப் படங்களிலும் கபீர் நடித்துள்ளார். 

இந்நிலையில், வரும் ஜூன் 23ஆம் தேதி இவருக்கும் ஹரியானவைச் சேர்ந்த ஆசிரியையான சீமா சாஹல் என்பவருக்கும் டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கபீருக்கும் திரைத்துறையினரும் சினிமா ரசிகர்களும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.

இந்த மாதம் முழுவதுமே திரைத்துறையில் கல்யாண சீசன் களைக்கட்டி வருகிறது.  முன்னதாக பிரபல நடிகர் சர்வானந்துக்கு கடந்த 3ஆம் தேதி ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

தெலுங்கு, தமிழ் மொழிகளில் பிரபல நடிகரான சர்வானந்த், கோலிவுட்டில் ‘எங்கேயும் எப்போதும்’ ‘ஜேகே எனும் நண்பனின் கதை’ ஆகிய படங்களில் நடித்துள்ள சர்வானந்த்,  ‘காதல்னா சும்மா இல்லை’ எனும் தெலுங்கு டப்பிங் படத்தில் இடம்பெற்ற ‘என்னமோ செய்தாய் நீ’ பாடல் மூலமும் பிரபலமானார்.

மேலும் தெலுங்கில் பிரபல நடிகரான சர்வானந்த், 38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட நாள்களாக ஒருவரைக் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தான் ரக்‌ஷிதா எனும் பெண்ணை மணப்பதாக சர்வானந்த அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

38 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், சர்வானந்த நீண்ட நாள்களாக ஒருவரைக் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் தான் ரக்‌ஷிதா எனும் பெண்ணை மணப்பதாக சர்வானந்த அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். தொடர்ந்து ஜூன் 3ஆம் தேதி ஜெய்ப்பூரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ சர்வானந்தின் திருமணம் நடைபெற்றது.  

இதேபோல் முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடிகை லாவண்யா திரிபாதிக்கு சென்ற வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு தொடர்ந்து டோலிவுட் ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola