Kaavaalaa Song: இந்த நூற்றாண்டை ரீல்ஸ் நூற்றாண்டு எனக் கூறும் அளவிற்கு சமூகவலைதள பயன்பாடு அனைத்து வயது தரப்பு மக்களிடத்திலும் அதிகரித்து விட்டது. குறிப்பாக, மெட்ரோ நகரம் தொடங்கி குக்கிராமங்கள் வரை சமூகவலைதளத்தை எதிர்கொள்ளாத மக்கள் என்பது மிகக்குறைவாகவே இருக்கும். அப்படியான இந்த நவீன யுகத்தில் ஏதாவது ஒரு விஷயம் மக்களுக்கு பிடித்திருந்தால் போதும் அதனை கொண்டாடி தீர்க்கும் வரையில் ஓயமாட்டார்கள். அப்படிதான் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படமான ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் அனைத்து தரப்பு மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனின் இசை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தாலும், டேன்ஸ் மாஸ்டர் ஜானியின் நடனம் பாடலை மேலும் பெப்பியாக மாற்றியுள்ளது. சிக்னேட்சர் ஸ்டெப் போடுவதை கைவந்த கலையாகக் கொண்டுள்ள ட்டென்ஸ் மாஸ்டரின் ஸ்டெப்பை தனது பாணியில் மிகச்சிறப்பாக நடிகை தமன்னா ஆடியது அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த பாடல் வரிகளை ரீல்ஸ் செய்துள்ள வீடியோக்கள் மட்டும் 55 ஆயிரம் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் இளையராஜாவைக் குறிப்பிடுகையில் மாட்டு வண்டி போகாத ஊருக்கெல்லாம் பாட்டு வண்டி கட்டிக்கொண்டு போனவர் இளையராஜா என்பார்கள். ஆனால் இன்றைய நவீன உலககில் பாடல் வெளியான தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளிலும் இந்த பாடலுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. ஒரு துள்ளலான பாடல் நடமனாட தூண்டும் என்பதற்கு காவாலா படால் ஒரு சாட்ச்சியாக அமைந்துள்ளது. சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றில், தனது இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஊன்று கோலை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
அதேபோல் நடிகை தமன்னா, ஒரு கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் சிலர் இணைந்து காவாலா பாடலின் சிக்னேட்சர் ஸ்டெப் ஆடுவதை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் முதல் பாடல் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், இன்று அதாவது ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஹூக்கும் பாடல் வெளியாகவுள்ளது.