ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா பாடல் வெளியாகி உள்ள நிலையில், அதில் பாதி தமிழ், பாதி தெலுங்கு வரிகள் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் அடுத்தப்படமாக ‘ஜெயிலர்’ உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன்  என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படமானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜெயிலர் படம் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அடுத்தடுத்து படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘காவாலா’ இன்று வெளியானது. அந்த பாடலை பாடலாசிரியர், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய நிலையில் ஷில்பா ராவ் பாடியுள்ளார். காவாலா பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனமைத்துள்ளார். இதனிடையே காவாலா பாடல் பாதி தமிழ், பாதி தெலுங்கு வரிகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. 


ரசிக்க வைக்கும் வரிகள் 



  • ரா நீ பார்த்தாலே தீயாவுதே.. பத்திக்க வைக்கும் போதையா..யப்பா யப்பப்பா..

  • கண்ணுக்குள்ள நீ செய்தி சொல்லையா....

  • சிக்கிக்க வைக்கும் ஆசையா வந்தாயேயப்பா.. தங்கத்துல என்னை தேச்சுக்கோயேன் பா..

  • கொஞ்சம் தயங்காதப்பா.. கொஞ்சம் அடங்காதப்பா..

  • ரொம்ப மயங்காதப்பா.. தப்பா தப்பப்பா...

  • கொஞ்சம் பாட்டு காவாலா.. கொஞ்சம் டான்ஸ் காவாலா..

  • ரெண்டும் உனக்காகவே காவாலா..காவாலா..


என பாடலின் சில வரிகள் மீண்டும் முணுமுணுக்க வைக்கும் வகையில் உள்ளது. மேலும் பாடலின் ஷூட்டிங் வீடியோவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி டான்ஸ் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதற்கு தியேட்டரில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினி என்றாலே தனக்கு பிடிக்காவிட்டாலும் ரசிகர்களுக்காக மாஸாக டான்ஸ் ஆடுவார். அவருக்கு இப்படி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடனத்தை கொடுத்து விட்டீர்களே என ஒருபக்கம் ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.