Kakka Kakka Movie : மாதவன் நிராகரித்தார் - சூர்யா ஹிட் கொடுத்தார்... காக்க காக்க திரைப்படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகள் 


சூர்யா - ஜோதிகா நடிப்பில் 2003ம் வெளிவந்த காக்க காக்க திரைப்படம் ஒரு சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கலைப்புலி. எஸ். தண்டு தயாரிப்பில் இப்படம் வெளிவந்து இன்றோடு 19 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் இன்றும் இந்த அக்ஷன் திரில்லர் திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் அப்படத்தின் ஒவ்வொவரு பாடல்களும் சூப்பர் ஹிட்.  ஜீவன் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். 


2003ம் ஆண்டு வெளியான படங்களில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம் காக்க காக்க திரைப்படம். காதலர்களை பெரிதும் கவர்ந்தது இந்த படம். 


வித்தியாசமான திரைக்கதை :


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் " காக்க காக்க". இப்படத்தின் வெற்றிக்கு காரணம் வழக்கமான ஃபார்முலா திரைப்படமாக இல்லாமல் ஸ்டைலான மற்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் போலீஸ் சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 


அனைவருக்கும் பிடித்த கியூட் ஜோடி சூர்யா -ஜோதிகா. இருவரும் இப்படத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடித்து இருந்தனர். கலைப்புலி. எஸ். தாணு அவர்களுக்கு இப்படம் ஒரு மறுபிரவேசமாகவே அமைந்தது. 


 



நெஞ்சில் நின்ற கதாபாத்திரங்கள்:


காக்க காக்க திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றதால் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் திரையுல வாழ்வில் இப்படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ACP அன்புச்செல்வன் என்ற கதாபாத்திரம் அப்படியே சூர்யாவிற்கு பொருத்தமாக இருந்தது. மாயா எனும் ஆசிரியை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினார் ஜோதிகா. "ஷி ஐஸ் எ ஃபாண்டஸி"  பாடல் ஜோதிகாவிற்காகவே எழுதப்பட்டது. அப்படி ஒரு அழகு. 


ரசிகர்கள் மத்தியில் போட்டி: 


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படமா அல்லது 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படமா எது சிறந்த திரைப்படம் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியே உள்ளது. இதை வைத்து மீம்ஸ் கிரியேடர்ஸ் ஒரு பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர். 


வாரணம் ஆயிரம், காக்க காக்க இரண்டுமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள் தான். நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் இவை இரண்டுமே ஒரு வித்யாசமான திரைக்கதைகள் உள்ள சிறந்த திரைப்படங்கள் தான் என்கின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்.


கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படம் மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி திரைப்படம் இவை இரண்டிற்கும் முதலில் பரிந்துரைக்கப்பட்டது நடிகர் மாதவன். அவர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நிராகரித்ததால் இந்த வாய்ப்புகள் நடிகர் சூர்யாவிற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே சூர்யாவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்.