சன் மியூசிக் சேனல் மூலம் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் காஜல் பசுபதி. அதன் மூலம் பிரபலமான காஜலுக்கு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வசூல் ராஜா எம்பிபிஎஸ், டிஷ்யூம், மௌனகுரு, சிங்கம், இரும்பு குதிரை, கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். நடன இயக்குநர் சாண்டி மாஸ்ட்டரை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆனால் இன்றும் சாண்டி மாஸ்டர் குடும்பத்தினருடன் நல்ல நட்பில் உள்ளார் காஜல் பசுபதி. 



மிகவும் வெளிப்படையாக தைரியமாக பேசக்கூடியவர் என்பதாலே காஜல் என்றாலே டெரர் என மக்கள் மட்டுமல்ல சினிமா துறையில் இருப்பவர்களும் கூட அலறுவார்கள்.


அந்த அளவுக்கு அம்மணி ரொம்பவே ஓப்பன் டைப். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட காஜல் பசுபதி தன்னுடைய காதல், கல்யாணம், கருத்து வேறுபாடு, திரை வாழ்க்கை இப்படி பல விஷயங்களை பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார். 


அந்த வகையில் அவர் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் டீல் பற்றியும் பொதுவாக சினிமா துறையில் பெண்கள் சந்திக்கும் நெருக்கடி குறித்தும் மிகவும் ஓப்பனாக பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பெண்கள் சிங்கிளாக இருக்கிறார்களா அல்லது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். எப்போது அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேசுவாங்க என நான் என்னோட அனுபவத்தை வைத்து சொல்றேன்.


எப்போ நாமாக போய் வாய்ப்பு கேக்குறோமோ அங்கு நடக்கும். அவங்களாக தொடர்பு கொண்டு இந்த கேரக்டர் இருக்கு பண்ண முடியுமா அப்படினு கேக்குற இடத்துல இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை ரொம்ப கம்மியா தான் இருக்கும்.


சன் மியூசிக் வந்த புதுசுல படத்துல நடிக்க ஆரம்பிக்கும் போது என்ன விஷயம் என்றே தெரியாம இருந்த சமயத்தில் எனக்கு போன் வந்தது. நீ அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா தான் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு அப்படினு கேட்டவங்க இருக்காங்க. அதை பண்றதுக்கு ஆள் இருக்காங்க. அது தான் லைஃப் அப்படினு பண்ணறவங்க இருக்காங்க. என்னோட பேமெண்ட் வேணும்னா கம்மி பண்ணிக்கிட்டு அவங்கள வேணும்னா வைச்சுக்கோங்க அப்படினு நான் சொன்ன காலமும் இருக்கு. 



இது மாதிரி கேட்டு வரும் போது கிளீன் ப்ரஜெக்ட்டா இருந்தா மட்டும் சொல்லுங்க. பேமெண்ட்டில் வேணும்னா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கலாம் மத்த விஷயத்துல காம்ப்ரமைஸ் பண்ணமுடியாது அப்படின்னு தெளிவா சொல்லிடுவேன். பேமெண்ட் மட்டும் தான்னு தெளிவா சொல்லிடுவேன். இல்லைனா எல்லாத்தையும் கட் பண்ணிடுவாங்க. 


நாமாக வாய்ப்பு தேடிப்போகும் போது டைரக்டர் கிட்ட நேரடியாக பேச போறது கிடையாது. அவருக்கு கீழ் மேனேஜர் என எவனாவது இருப்பான். அவன் தான் முதலில் ஆரம்பிப்பான். எவன் ஒருத்தன் முதல்ல நீங்க நேர்ல வாங்க பாத்துக்கலாம் அப்படின்னு சொல்றானோ அவன் கண்டிப்பா அட்ஜெஸ்ட்மென்ட்டுக்காக தான் வர சொல்வான்.


நேர்ல பார்த்தா தான் ப்ராஜெக்ட் தருவேன் என சொல்றவன் முக்கால்வாசி பேர் ஏமாத்துறவங்களாதான் இருப்பாங்க” என மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார் காஜல் பசுபதி.