தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.   


சினிமா என்ட்ரி :


முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மற்றும் பழம்பெரும் நடிகரான என். டி. ராமாராவ் பேரனான நந்தமூரி தாரக ராமாராவ் ரசிகர்கள் மத்தியில்  என்.டி.ஆர் என பிரபலமாக அறியப்படுகிறார். இவரை ரசிகர்கள் இளம் புலி என செல்லமாக அழைக்கிறார்கள். தனது 10வது வயதில் 'பிரம்மஸ்ரீ விஸ்வமித்ரா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


2001ம் ஆண்டில் வெளியான 'நின்னு சூடாலனி' படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஒரு நடிகராக மட்டுமின்றி சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கும் ஜூனியர் என்டிஆர் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.    


 



சம்பளத்தை உயர்த்திய ஜூனியர் என்டிஆர்:


ஜூனியர் என்டிஆர் சொத்து மதிப்பு சுமார் 450 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. திரைப்படங்களில் மட்டுமின்றி பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 12 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று வந்த ஜூனியர் என்டிஆர், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 60 கோடிக்கும் மேல் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது வார் 2 என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். அந்த படத்திற்காக அவர் 100 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.  


ஆடம்பர சொத்து மதிப்பு :


ஜூனியர் என்டிஆர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சொகுசு பங்களா ஒன்றில் வசித்து வருகிறார். அதன் மதிப்பு 25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பெங்களூரிலும் சில சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கார்கள் மீதும் மிகுந்த விருப்பம் கொண்ட ஜூனியர் என்டிஆர் லம்போர்கினி உருஸ், ரேஞ்ச் ரோவர், பி.எம்.டபிள்யூ, போர்ஸ்,மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். அது மட்டுமின்றி 80 கோடி மதிப்பிலான தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார். கார்களை போலவே வாட்ச் கலெக்ஷன் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். 4 கோடி மதிப்பிலான ரிச்சர்ட் மில்லே மற்றும் 2.5 கோடி மதிப்பிலான நாட்டிலஸ் 40MM வாட்ச் உள்ளிடவையும் வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 


ஜூனியர் என்டிஆர் சொத்து மதிப்பு பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்கிறார்கள். 


 



ஜான்வி கபூர் - ஜூனியர் என்டிஆர்


 


பர்த்டே ஸ்பெஷல் :


ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை அவரின் பிறந்தநாளை ஒட்டி வெளியிட்டுள்ளனர். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர் நடிக்கும் படத்திற்கு 'தேவரா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டது.