June 27 : என்ன வேணும் உனக்கு...ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
June 27 Release : தமிழ் மற்றும் பிற மொழிகளில் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

மார்கன்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் லியோ ஜான் பால் இயக்கியுள்ள படம் மார்கன். விஜய் ஆண்டனி, அஜய் திஷன், சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை இயக்கியுள்ள லியோ ஜான் பால் ஒரு பிரபல படத்தொகுப்பாளர். இவர் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், A1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட்டிங் செய்தவர். வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூஉன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது
கண்ணப்பா
விஷ்ணு மஞ்சு கதை திரைக்கதை எழுதி முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படம் கண்ணப்பா. விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, ப்ரீத்தி முகுந்த் அத்ஹுன் அத்ஹுர் அத்ஹுர் அத்ஹுன் வாணி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது
லவ் மேரேஜ்
ஷன்முக பிரியன் இயக்கி விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் லவ் மேரேஜ். மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம், கஜராஜ், கோடாங்கி வடிவேலு, வெற்றியாளர் ராமச்சந்திரன், யாசர் ஆகியோர் பிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது
குட் டே
அறிமுக இயக்குநர் என் அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் நடித்துள்ள படம் குட் டே. காளி வெங்கட் , மைனா நந்தினி , ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் , விஜய் முருகன் (கலை இயக்குனர்), ஜீவா சுப்பிரமணியம், பாரத் நெல்லையப்பன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நியூ மாங்க் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
திருக்குறள்
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரித்துள்ள படம் திருக்குறள். முப்பாலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் வள்ளுவராக கலைச்சோழல் வாசுகியாக தனலட்சுமி நடித்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது
F1
ஜோசஃப் கொசின்ஸ்கி இயக்கி பிராட் பிட் நடித்துள்ள படம் F1 . கார் பந்தையத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.






















