சினிமாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளித் திரையினை புதிய புதிய படங்கள் அலங்கரித்த வண்ணமே இருக்கின்றன. அவ்வகையில் எந்தவொரு சூப்பர் ஸ்டார்களும் இல்லாமல், கலெக்ஷன் கிங்ஸ் இல்லாமல் இந்த மாதம் உள்ள ஐந்து வெள்ளிக்கிழமைகள் அனைத்திலும் சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
இதில் மாதத்தின் முதல் தேதியும் முதல் வெள்ளிக்கிழமையுமான இன்று, அருண்விஜய் நடிப்பில் யானை படமும், நடிகர் மாதவன் இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி படமும், அருள் நிதி நடிப்பில் டி-ப்ளாக் படமும் ரிலீசாகி இருக்கிறது. இந்த மூன்று படங்களும் மூன்று விதமான கதைக்களத்தினைக் கொண்டுள்ளது. இதில் டி-ப்ளாக் ஆக்சன் த்ரில்லர் படமாகவும், யானை ஆக்சன் டிராமாவாகவும், ராக்கெட்ரி டிராமா என வேறுவேறு ஜெனர்களைக் கொண்டுள்ளது.
ஜூலையின் இரண்டாவது வாரத்தில் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளர் சரவணன் அருள் நாயகனாக அறிமுகமாகியுள்ள தி லெஜண்ட் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தினை ஜெடி & ஜெர்ரி இயக்கியுள்ளனர். இப்படம் ஆக்சன் ட்ராமாவாக வெளிவரவுள்ளது. நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆகியோர் நடிப்பில் ஒரு காமெடிப் படமாக ‘பன்னிக் குட்டி’ எனும் படம் ரிலீசாகவுள்ளது. இப்படத்தினை இயக்கியது அனுச்சரண் முருகையன்.
ஜூலை மாதத்தின் மூன்றாவது வெள்ளியான ஜூலை 15ல் எப்போதும் தன் வித்தியாசமான இயக்கத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி வைத்துள்ள இயக்குனர் மற்றும் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின், உலகின் முதல் நான் லேயர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல் படம் ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இம்மாதத்தின் 19ம் தேதி நடிகர் அருண்விஜய் நடிப்பில் மீண்டும் ஒரு படம் வெளியாகவுள்ளது. இப்படம் ராணுவத்தினை மைய்யப்படுத்திய கதைக்களம் என்பதால் படத்திற்கு பார்டர் என்ற டைட்டிலை படக்குழு வைத்துள்ளது.
இதற்கடுத்து ஜூலை 24ம் தேதி நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கள்ளப்பார்ட் மடமும், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடமையைச் செய் எனும் படமும் ரிலீசாகவுள்ளது. இருவருமே சுவாரஸ்யமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் என்பதால் படங்கள் பெரும் எதிர் பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்