தன்னிடம் அப்டேட் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடுகடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் டிடி போல் தெலுங்கு தொலைக்காட்சி உலகில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் சுமா. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வரும் இவரிடம் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடுகடுத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.


தொகுப்பாளினியிடம் கோபம்!


முன்னதாக ஜூனியர் என்.டி.ஆரின் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் கல்யாண் ராம் நந்தமூரியின்  ‘அமிகோஸ்’ பட விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார்.


அப்போது அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுமா, ஜூனியர் என்.டி.ஆர் 30 பற்றி ரசிகர்கள் ஆர்வமா காத்துட்டு இருக்காங்க” எனக் கூறி அவரை பேச அழைத்தார்.


இதனை அடுத்து கடுப்பானபடி கோபத்துடன் மைக்கை வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர், இவர்கள் கேட்கவில்லை என்றாலும் நீங்களே கேட்க வைத்துவிடுவீர்கள்” என கடுகடுத்தார்.


தொடர்ந்து பேசிய ஜூனியர் என்.டி.ஆர் ”நான் உங்களிடம் ஒரு சிறு கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்” என பேசத் தொடங்கினார்.


இயக்குநர், தயாரிப்பாளருக்கு அழுத்தம்


 “சில நேரங்களில் நாங்கள் ஒரு படத்தில் பணிபுரியும் போது, ​​பகிர்ந்து கொள்ள அதிக தகவல்கள் இருக்காது. நாள்தோறும் அல்லது  சில மணி நேரங்களுக்கு ஒருமுறை எங்களால் அப்டேட் பகிர முடியாது. உங்கள் உற்சாகத்தை நான் புரிந்துகொள்கிறேன்.


ஆனால் சில நேரங்களில் இவை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 


இந்த அழுத்தம் காரணமாக சில சமயங்களில் அதிக மதிப்பு இல்லாத அப்டேட்களை பகிர்கிறோம், இது ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய வைக்கிறது.


’மனைவியுடம் பகிராமல் ரசிகர்களிடம் பகிர்கிறேன்’


ஏதேனும் அப்டேட் இருந்தால், அதை வீட்டில் இருக்கும் மனைவியுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பே நாங்கள் ரசிகர்களாகிய உங்களுடன் தான் பகிர்ந்து கொள்வோம். நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை புரிந்துகொண்டதால் தான் இதனை செய்கிறோம். ஏதேனும் முக்கியமான அப்டேட் இருந்தால் உங்களுடன் தான் அதனை நாங்கள் பகிர்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.


ஆர்.ஆர்.ஆர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என். டி.ஆரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், அவரது ரசிகர்கள் ஜூனியர் என்.டி.ஆரின் 30ஆவது படம் குறித்து தொடர்ந்து அப்டேட் கேட்டும் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.


இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் இவ்வாறு நடந்து கொண்டது டோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது. மற்றொரு புறம் தன் அடுத்த படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜூனியர் என்.டி.ஆர் கைக்கோர்க்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க: Prakash Raj Video : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" : தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ்ராஜ்