தேவரா
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரகாஷ் ராஜ் , சைஃப் அலிகான் , ஜான்வி கபூர் , கலையரசன் , ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
தேவரா படத்தின் கதை
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதையே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்துக்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா மற்றும் அவனது நண்பர்கள்.
கடத்தப்பட்ட ஆயுதங்கள் தீவிரவாத செயலுக்கு பயண்படுவது தெரிந்து இனிமேல் கடலுக்கு யாரும் செல்லக்கூடாது என முடிவு செய்கிறார் தேவரா. இது பிடிக்காத பைரா உள்ளிட்ட அவனது சகாக்கள் தேவராவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். இதனால் தேவரா கடலுக்குள் சென்று பதுங்குகிறான். கடலுக்குள் கடத்தலுக்காக செல்லுபவர்கள் பினமாக திரும்பி வருகிறார்கள். ஒரு நாள் தேவரா திரும்பி வருவான் அப்போது அவனை கொலை செய்ய காத்திருக்கிறான் பைரா. தேவராவை வெளியே வரவழைக்க அவன் மகனான வராவை தனது கும்பலுடன் கடலுக்கு அனுப்புகிறான். தேவரா திரும்பி வந்தாரா. அவனை கொல்ல நினைக்கும் பைராவின் ஆசை நிறைவேறியதா என்பதே தேவரா முதல் பாகத்தின் கதை.
தேவரா விமர்சனத்தை படிக்க : Devara Review : டபுள் ரோலில் கலக்கினாரா ஜூனியர் என்.டி.ஆர்...தேவரா திரைப்பட விமர்சனம் இதோ
தி கோட் வசூலை வீழ்த்திய தேவரா
தேவரா திரைப்படம் வெளியாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தில் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் 6 நாட்களில் தேவரா திரைப்படம் உலகளவில் ரூ 396 கோடி வசூலித்துள்ளது. விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான தி கோட் திரைப்படம் 6 நாட்களில் 318 கோடி வசூலித்தது. தி கோட் படத்திற்கு தமிழ் தவிர தெலுங்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்தது போலவே தேவரா படத்திற்கும் தமிழ் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் படத்திற்கு எல்லா தரப்பில் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அடுத்து வரக்கூடிய வாரத்தில் தேவரா தி கோட் படத்தின் மொத்த வசூலை முறியடித்து 500 கோடி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.