பிரபல சமையல் கலைஞர் மாதம்பாட்டி ரங்கராஜூடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டு சோசியல் மீடியாவை பற்றவைத்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.
மாதம்பட்டி ரங்கராஜ்:
தென் இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள் , அரசியல் பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் இல்லாமல் இருக்காது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் மீது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகாரளித்து சர்ச்சையை கிளப்பினார்.
தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கி விட்டுச் சென்றதாக அவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார். மேலும் தொடர்ச்சியாக அவரை குற்றம் சுமத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருக்கிறார்.
மீண்டும் பற்றவைத்த ஜாய் கிரிஸில்டா:
இந்த நிலையில் தான் ஜாய் கிரிஸில்டா இன்று (செப்டம்பர் 23) மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படத்தை அதாவது நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குற்ற உணர்வு இல்லை, அவமானம் இல்லை, ஒரு தந்தை இருக்க வேண்டிய இடத்தில் மௌனம் மட்டுமே. படம் என் கணவர் என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ்” என்று கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.