தனுஷ் 54
தனுஷ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் குபேரா திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்தியில் தனுஷ் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இப்படியான நிலையில் தமிழில் தனுஷின் அடுத்த படத்தின் பூஜை கடந்த வியாழனன்று நடைபெற்றது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தனுஷின் 54 ஆவது படத்தை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாக இருக்கிறது
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் தனுஷூக்கு ஜோடியாக முதல் முறையாக மமிதா பைஜு இணைந்துள்ளார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒவ்வொரு முறையும் தனுஷ் படத்தின் அப்டேட் வெளியாகும் சமயத்தில் அவரைப் பற்றிய ஏதாவது ஒரு வதந்தி சமூக வலைதளத்தில் பரவுகிறது. அந்த வகையில் பிரபல இந்தி பத்திரிகையாளர் நயன் தீப் தனுஷை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
மோசமாக நடந்துகொண்ட தனுஷ்
" தனுஷ் நடித்திருந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் இந்தி ப்ரோமோஷனுக்காக நான் அவரை நேர்காணல் செய்ய போனேன். அப்போது தனுஷின் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. கஜோல் கூட நடித்தது எப்படி இருந்தது என்று கேட்டேன். அத நீங்க அவங்ககிட்டதான் கேக்கனும்னு பதில் சொல்லிட்டார். அந்த நேரத்தில் அங்கு ஜூஸ் கொண்டு வந்த நபரிடம் அவர் ரொம்பவும் மோசமாக பேசினார். நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டாராக இருக்கலாம் ஆனால் உங்களை விட சமூகத்தில் கீழ் உள்ளவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த பேட்டி முடிந்ததும் படம் சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று அவர் என்மீது குற்றம்சாட்டினார்.