தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் 24 ஆண்டுகால சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் ஜோஜு ஜார்ஜ்.  அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக "ஜோசப்" படத்தின் வெற்றி அமைந்தது. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார்.  இந்த படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.  மேலும் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்" படம் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாக்கியது. "ஜோசப்" படம் தேசிய விருது குழுவின் சிறப்பு ஜூரி குறிப்புடன் பாராட்டுகளை பெற்றது.  ஜோஜு ஜார்ஜ் கடைசி வரை தேசிய விருதுக்காக போட்டியிட்டார். 


மேலும் அவரது நடிப்பில் வெளியான "சோழா" வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா - ஒரிசான்டி போட்டி, ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா - சர்வதேச சிறப்புப் போட்டி மற்றும் டோக்கியோ ஃபிலிமெக்ஸ் - சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர செய்தது.  ஜோஜு ஜார் தனது சினிமா பயணத்தில், "ஹலால் லவ் ஸ்டோரி," "ராமண்டே எடந்தோட்டம்," "லுக்கா சுப்பி," மற்றும் "துறமுகம்" போன்ற வெற்றிகளின் மூலம் தனக்கான தனி இடத்தை பெற்றார், மேலும் "ஜூன்", "ஆக்ஷன் ஹீரோ பிஜு" போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கில் நடித்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.  சளைக்காத அவரது நீடித்த அர்ப்பணிப்பு, சினிமா உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு ஒரு சான்று.


நடிகராக வெற்றி பெற்ற ஜோஜு ஜார்ஜ் இம்முறை இயக்குநராக தனது கேரியரில் மிகப்பெரிய அடுத்தக் கட்டத்தை எட்டி உள்ளார்.  ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கிய முதல் படம் 'பனி'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஜோஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திருச்சூர் நகரத்தில் நடக்கும் இரண்டு கேங்ஸ்டர்களின் கதைதான் பனி படம். ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் நாயகி அபிநயாதான் இந்தப் படத்திலும் நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் பனி படத்தை ஜோஜுவின் தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏடி ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆதம் மற்றும் சிஜோ வட்கான் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா தவிர, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், மெர்லட் ஆன் தாமஸ், லங்கா லட்சுமி, சாரா ரோஸ் ஜோசப், பாபு நம்பூதிரி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரஞ்சித் வேலாயுதன், பிட்டோ டேவிஸ், ரினோஷ் ஜார்ஜ், இயன் மற்றும் இவான் , அன்பு , ரமேஷ் கிரிஜா, டோனி ஜான்சன், பாபி குரியன் மற்றும் பிக் பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சாகர் மற்றும் ஜுனைஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல இயக்குநர் வேணுவும், படத்தொகுப்பை மனு ஆண்டனியும், இசை விஷ்ணு விஜயா கையாள்கின்றனர்.