WWF மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா 2024 ஆஸ்கர் விருது விழாவில் செய்த செயல், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளார். ஆஸ்கர் என்றும் அழைக்கப்படும் அகாடமி விருதுகள் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இம்முறையும் ஆஸ்கர் விருது விழாவை ஜிம்மி கேமில் தொகுத்து வழங்கினார். 






அப்போது, பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனுக்காக நாமினேசன் அறிவிக்கப்பட்டது. அப்போது, மேடைக்கு உட்புறத்தில் இருந்த ஜான் சீனா, முதலில் தனது தலையை மட்டுமே எட்டிப்பார்த்தார். அதன் தொடர்ச்சியாக உடல் முழுவதும் ஆடையின்றி வெறும் ஒரு அட்டையை மட்டுமே கீழே மறைத்துகொண்டு மேடை முழுவதும் நடக்க தொடங்கினார். இதன் காரணமாக, சிறிது நேரம் ஆஸ்கர் விருது விழா அதகளம் கொண்டு சிரிப்பலையில் அதிர்ந்தது. 


நேராக, நிர்வாணமாக மேடையில் இருந்த மைக்கிற்கு சென்ற ஜான் சீனா, அந்த காஸ்ட்யூம் டிசைனுக்கான அறிவிப்பு அட்டையுடன் வந்து தி பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர் அவார்ட் கோஸ் டூ என்று அறிவித்ததும் லைட் ஆஃப் செய்யப்பட்டது. அதன்பிறகு, எகிப்து வடிவ உடை ஜான் சீனாக்கு உடுத்தப்பட்டது. அந்த நேரத்தில் மீண்டும் சிரிப்பலை தொடர்ந்தது. சமீபத்தில், ஜான் சீனா ‘பீஸ் மேக்கர்ஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸில் ஜான் சீனா இதே நிர்வாண காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர் பிரிவில் 'புவர் திங்ஸ்' வெற்றி பெற்றுள்ளது. இதற்கான விருதை ஆடை வடிவமைப்பாளர் ஹோலி வாடிங்டன் பெற்றுள்ளார். ஆனால், விருதுக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டு, அவர் மேடையில் அழைக்கப்படுவதற்கு முன்புதான், ஜான் சீனா இந்த வேடிக்கையான நிகழ்வை நடத்தினார். தற்போது இதுகுறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






இந்தியாவில் 96வது அகாடமி விருதுகளின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நடக்கிறது. இப்போதைக்கு, ப்யூர் திங்ஸ் மற்றும் ஓப்பன்ஹைமர் ஆகியோர் பந்தயத்தில் முன்னணியில் உள்ளனர். இம்முறை நிஷா பஹுஜாவின் 'To Kill a Tiger' ஆவணப்படம் ஆவணப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதற்கு விருது கிடைக்கவில்லை. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை '20 டேஸ் இன் மரியுபோல்' பெற்றுள்ளது.