Jodi Movie : 23 ஆண்டுகளுக்கு முன் இன்று வெளியான ஜோடி திரைப்படம்... தமிழ் ரசிகர்களின் ஃபேவரட்
முரளி மனோகர் தயாரிப்பில் பிரவீன் காந்தி இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான அருமையான காதல் திரைப்படம் "ஜோடி". இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் மற்றும் கதாநாயகியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விஜயகுமார், நாசர், ஸ்ரீவித்யா, ஜனகராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராய்? சிம்ரன்? யாரு பெஸ்ட் :
தயாரிப்பாளர் முரளி மனோகர் - நடிகர் பிரசாந்த் கூட்டணி ஜீன்ஸ், காதல் கவிதை படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இப்படம் மூலம் இணைந்துள்ளார்கள். ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் தேர்ந்தேகப்பட்டது ஐஸ்வர்யா ராய் தானம் ஆனால் அவரின் பிஸி ஷெட்யூல் காரணமாக நடிக்க இயலாமல் போனதால் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சிறப்பு வேடத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்த வாய்ப்பும் இஷா கோபிகருக்கு சென்றது என்பது கூடுதல் செய்தி. இப்படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணனை எத்தனை பேர் கண்டுபிடித்தீர்கள் என தெரியவில்லை. ஆனால் நடிகை சிம்ரன் தோழியாக நடித்திருந்தார் திரிஷா.
பாடல்கள் படத்தின் பலம் :
ஏ. ஆர். ரஹ்மான் ஒரு இசை மேதை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பல பிளாக் பஸ்டர் படங்களுக்கு இசையமைத்தவர். ஆனால் அவர் இசையமைத்த ஒரு பழைய படத்தின் டியூன் ஒன்று ஒரு முழு திரைப்படத்தின் ஒளிபதிவிற்கு பயன்படுத்த பட்டுள்ளது. இயக்குனர் பிரவீன் காந்தி தன்னுடைய படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை வேண்டும் என நினைத்தார் ஆனால் ஏ.ஆர். ரஹ்மானின் பிஸி ஷெட்யூல் காரணமாக அவரால் அது முடியாமல் போனது. அதன் காரணமாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் "டோலி சாஜா கே ரக்னா" படத்தின் டியூனை பயன்படுத்தியுள்ளார்கள். மேலும் பின்னணி இசையை கையாண்டனர் சபேஷ்-முரளி. இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். பாடல்கள் இப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. தமிழில் வெளியான இப்படம் 2000ம் ஆண்டு கன்னடத்தில் சஜ்னி என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது. 90' ஸ் களில் வெளியான திரைப்படங்களில் நல்ல வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று ஜோடி திரைப்படம்.
ஜோடி கதையில் ஜோடி செய்த ஆள்மாறாட்டம்:
காதலர்களாக பிரசாந்த் மற்றும் சிம்ரன் பெற்றோரின் சம்மதத்திற்காக இருவரும் வீடு மாறி சென்று பெற்றோர்களின் மனதில் இடம் பிடிக்க ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். கடைசியில் இருவரின் பெற்றோர்களையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்களா...ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. இருவரும் அதற்காக செய்யும் கூத்து மிகவும் ஸ்வாரசியாயமாக இருந்தது.
மாஸ் ஹீரோ பிரசாந்த்:
90 'ஸ் களில் மாஸ் ஹீரோவாக முன்னணியில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். ஜோடி திரைப்படம் நடிகர் பிரசாந்தின் 25 வது திரைப்படம். இப்படம் அவர் திரைவாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்த சமயத்தில் மிகவும் பிஸியாக, பிரபலமாக இருந்தவர். அவரின் சிறப்பான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் அவரில் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்டில் ஜோடி திரைப்படமும் சேர்ந்துள்ளது.