பிரபல ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இத்தொடரில் கதாநாயகனாக நடிப்பதோடு, கதையையும் எழுதியுள்ளார். சின்னத்திரையின் முன்னணி இயக்குநரான பிரவீன் பென்னட் உடன் விஜய் குமார் ராஜேந்திரன் முதன்முறையாக இந்த சீரிஸின் மூலம் கைகோர்த்துள்ளார்.

Continues below advertisement

‘ஆர்.ஆர் ரிசார்ட்’ (RR Resort) என்ற கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, ஆனால் சமையல் கலையில் அபார  திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டிற்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான மோதலே இந்த சீரிஸின் மையக்கரு.

கோபக்கார தலைமைச் சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார். சமையலறையின் பரபரப்பான சூழலைத் தனது மிரட்டலான நடிப்பால் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் கீர்த்தி அமர், அபிநயா நேத்ரன், தர்ஷனா ஸ்ரீபால், சாய் தன்யா மற்றும் படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Continues below advertisement

காமெடி, டிராமா, லட்சியம் மற்றும் ஒரு சொகுசு விடுதியின் பின்னணியில் நடக்கும் கலாட்டாக்கள் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சீரிஸாக ‘ரிசார்ட்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசார்ட் சீரிஸ் வரும்  மார்ச் 13 முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 எபிசோட்களாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.  

ஜியோஹாட்ஸ்டார் பற்றி

JioHotstar இந்தியாவின் முன்னணி பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். பல மொழிகளில் வெளியாகும் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்கள், அசல் தொடர்கள், நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் விரிவான தளமாக இது திகழ்கிறது. உலகத் தரமான கதைகளை ஒவ்வொரு திரைக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன், புதுமை, உள்ளடக்கச் சேர்க்கை மற்றும் சிறப்பான கதைகள் மூலம் டிஜிட்டல் பொழுதுபோக்கை புதிய தளத்திற்கு எடுத்துச் வருகிறது.