Jayam Ravi: பத்து பக்க டயலாக்க மூணே காட்சில பிரபுதேவா சொல்லி இருப்பார்: ஜெயம் ரவி சிலாகித்த பாடல் எது தெரியுமா?

Jayam ravi: “பிரபு தேவா காட்சியை பாடல் போலவும், பாடலை காட்சி போலவும் எடுப்பார். பார்க்கவே ரொம்ப ஃ பேண்டஸியா இருக்கும்” என ஜெயம் ரவி சிலாகித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம், எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி, தீபாவளி, பேராண்மை, தாம் தூம், நிமிர்ந்து நில், பொன்னியின் செல்வன், மிருதன், போகன் என ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 

Continues below advertisement

எவர்கிரீன் எங்கேயும் காதல் :

அந்த வகையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபு தேவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, ராஜு சுந்தரம், சுமன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் திரைப்படம் 'எங்கேயும் காதல்'. பிரான்ஸ் மற்றும் பிற வெளிநாடுகளில்  படமாக்கப்பட்ட இப்படம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒவ்வொரு பாடலும் இன்றும் எவர்கிரீன் ரகம். அனைவரின் பிளே லிஸ்டிலும் நிச்சயம் இடம் பெற்று இருக்கும். 


திமு திமு பாடல் :

'எங்கேயும் காதல்' படத்தில் கார்த்திக் குரலில் ஒலித்த 'திமு திமு திம் திம் தினம்...' பாடல் மிகவும் அற்புதமான பாடல். அந்தப் பாடல் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார் அப்படத்தின் ஹீரோ ஜெயம் ரவி. “அந்தப் படத்தில் அந்த பாடலில் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். பிரபு தேவா சார் காட்சியை பாடல் போலவும், பாடலை காட்சி போலவும் எடுப்பார். அது ஒரு மான்டேஜ் வெரைட்டி என்பதால் அந்த பாடலை சீன் போல ஷூட் பண்ணாரு.

ரொம்ப அழகான கற்பனையா இருக்கும். அந்த பாடலில் அந்த கேரக்டரில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் தெரியும். ஹீரோ சில நேரம் ஜாலியா இருப்பான், அதே நேரத்தில் கொஞ்ச யோசிக்கிற மாதிரி இருப்பான். அவன் யாரையோ மிஸ் பண்ணுவான். ஆனா அவன் யாரையோ மிஸ் பண்ணறோம் என்பதை கூட உணர மாட்டான். 

 

அதே போல தினமும் அவன் ஒரு டார்கெட் வைச்சு இருப்பான். முதல அவன் குறி கரெக்ட்டா போகும். ஒரு வாரம் கழிச்சு பண்ணும்போது குறி தவறும். கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த டார்க்கெட்டையே மறந்துடுவான். அவன் எதையோ தொலைச்ச மாதிரியே இருப்பான். ஒரு பத்து பக்க டயலாக் வர வேண்டிய இடத்துல அதை மூணே ஷாட்ல அழகாக சொல்லியிருப்பார் பிரபுதேவா சார். எனக்கு அந்தப் படம் அனுபவம் கொஞ்சம் புதுசா இருந்தது" என்றார் நடிகர் ஜெயம் ரவி.  

 

'எங்கேயும் காதல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை படத்திற்கு வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்து இருந்தது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola