சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை உலகமே எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயம் ரவி ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 150 நாட்களில் முடித்த மணிரத்னம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு வினோதமான ரியாக்ஷனை கொடுத்தார் என்பதை சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. 


 



 


ஷாக்கான பாகுபலி இயக்குனர் :


பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரு நேர்காணலின் போது ஜெயம் ரவி கூறுகையில் இயக்குனர் மணிரத்னம் இந்த பீரியாடிக் படத்தின் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பை வெறும் 150 நாட்களில் முடித்து விட்டோம் என்று ராஜமௌலி சாரிடம் ஜெயம் ரவி கூறியுள்ளார். அப்போது ஷாக்கான ராஜமௌலி சார் நாற்காலியில் இருந்து எழுந்து, இப்படி எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தாதே என்றுள்ளார். அது தான் இயக்குனர் மணிரத்னம் மீது ராஜமௌலி சாருக்கு இருக்கும் மரியாதை. இதை முதலில் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு நீங்கள் அனைவரும் இதை எப்படி செய்து  முடித்தீர்கள் என்று கேட்டு அனைவரும் அவரிடம் இருந்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது அதை கற்று கொள்ளுங்கள் என்றுள்ளார் ராஜமௌலி. பாகுபலி, RRR உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜமௌலி. அவருக்கு இயக்குனர் மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். 


 







பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் செப்டம்பர் 30ம் தேதி உலக அளவில் உள்ள திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பல திறமையான கலைஞர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இதை இயக்குனர் மணிரத்னத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என மறுபடியும் நிரூபித்துள்ளார்.