நடிகர் ஜெயம் ரவி, சென்னை ஈசிஆரில் அமைந்திருக்கும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத்தரவேண்டும் என ர போலீஸில் புகார் அளித்துள்ளார்
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விவாகரத்து விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், ரவி இப்படியான புகாரை மனைவி ஆர்த்தி மீது அளித்திருப்பது இவ்விஷயத்தில் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் 9 அம் தேதி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவு முடிவுக்கு வந்துவிட்டது என ஜெயம் ரவி தெரிவித்தார். இந்த விவாகரத்து இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி மீது குற்றம்சாட்டும் ஒரு தகவலை வெளியிட்டார். இந்த விவாகரத்து முடிவு முழுக்க முழுக்க ஜெயம் ரவி தனது சொந்த விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டது எனவும், தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்துகோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் நடிகர் ரவி. இந்த மனு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கெனிஷா பிரான்சிஸ் (Spiritual Healer Kenishaa Francis) விளக்கம்
நடிகர் ஜெயம் ரவிக்கும் கோவாவைச் சேர்ந்த பிரபல பாடகியும், ஹீலருமான கெனிஷா பிரான்சிஸ் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.
நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்டபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக சினிமா யூட்யூபர்கள் தங்கள் சேனல்களில் பேசி வந்தனர். இது குறித்து நடிகர் ஜெயம் ரவி விளக்கமளித்திருந்தார். இந்த தகவல்கள் இணையத்தில் பரவத்தொடங்கியதும் கெனிஷா பிரான்சிஸில் இன்ஸ்டாகிராம் கணக்கை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டார்கள். அவரது பதிவுகளில் ட்ரோல் செய்யும் வகையில் பல கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டன. தற்போது நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு கெனிஷா பதிலளித்துள்ளார்.
கெனிஷாவின் பதிவு ஒன்றில் “ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா?” என்று நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார் இதற்கு பதிலளித்த கெனிஷா “நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களிடம் இருந்து உங்கள் கீழ்மையான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்களே ஒரு பாதுகாப்பான நபர்தானா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயம் ரவி விளக்கம்
”வாழு வாழவிடு. ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அப்படி பண்ணாதீங்க. கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் சொந்தமாக இந்த இடத்திற்கு வந்தவங்க. நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவதுதான் எங்களது நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது” என்று ஜெயம் ரவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது