தமிழ் சினிமாவில்  மிகுந்த மரியாதைக்குரிய நபராக பார்க்கப்படுபவர் நடிகர் நாசர். இவரது சகோதரரான ஜவஹர் தொடர்ந்து நாசர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதாவது வயதான தனது பெற்றோர்களை நாசர் கவனித்துக்கொள்வதில்லை என்றும் , தான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். தனது தாய்க்கு பேரன்களின் (நாசரின் மகன்கள் ) முகம் கூட தெரியாது. தொலைக்காட்சியில்தான் அவர்களை காட்டுவேன் என தெரிவித்த ஜவஹர் . அவர் ஆரம்ப காலம் முதலே குடும்பத்திற்கு உதவி செய்யவில்லை என்கிறார்.

 

பேட்டி ஒன்றியில் பேசிய ஜவஹர் "நாசர் 25 வருடங்களுக்கு முன்பு மாதம் 3000 ரூபாய் மட்டும்தான் கொடுத்தாரு வீட்டுக்கு. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த சமயத்துல நான் 1 லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். என் பெரிய அண்ணனுக்கு கூட நான் வீடு கட்டிக்கொடுத்திருக்கேன்.நான் எல்லோருக்குமே உதவி செய்வேன். நான் பாரிஸ்ல இருந்த சமயத்துல நான் ஒரு கோலா கூட குடிக்கமாட்டேன். நம்ம நாட்டுக்கு வந்துதான் செலவு பண்ணுவேன். நாசருக்கு எல்லாமே தெரியும்.  நான் நாசரை மறந்துட்டேன். அவங்க மனைவியையும் மறந்துட்டேன். எனக்கு சொந்தங்கள் எல்லாமே ஏழையாக இருக்குறவங்கதான். ஒரு நாள் திடீர்னு நாசர் மனைவிக்கு மக்கள் நீதி மையத்துல பதவி கொடுத்தாங்க. பாரதி கண்ட புதுமை பெண் மாதிரி நிறைய பேசுனாங்க. எனக்கு இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. நாட்டுக்கு நல்லது பண்ண அவ்வளவு பேசுறாங்க. அவங்க ஏன் மாமனார் , மாமியாருக்கு உதவி பண்ணனும்னு தோணலை.

என் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். நான் என் மகனை ஒரு வயசுல இருந்து வளர்க்குறேன். அவங்க அம்மா என்னை விட்டு போயிட்டாங்க. அம்மா சரியில்லைனு அப்பா கஸ்டடியில கொடுத்துட்டாங்க. நான் எல்லோரையும் நல்லா பார்த்துக்குறேன் .” என தெரிவித்துள்ளார்.