தான் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை கேத்தரின் தெரசாவுடன் இணைந்து ஜேசன் சஞ்சய் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன்

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரின் மகனான விஜய் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். அரசியலில் களமிறங்கியுள்ள அவர், ஜனநாயகன் படத்துடன் தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விலக உள்ளார். இப்படியான நிலையில் இவர்களின் குடும்பத்தில் இருந்து அடுத்ததாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக எண்ட்ரீ ஆகிறார். 

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு சிக்மா என பெயரிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Continues below advertisement

2026ல் வெளியாகும் படம்

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பிரவீன் கே.எல், எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

பாடலுக்கு நடனமாடுவதாக தகவல் 

 இப்படியான நிலையில் இயக்குநராக மட்டுமல்லாமல் திரையிலும் தன் முகத்தை பல இளம் இயக்குநர்கள் பிரதிபலித்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் வரிசையில் ஜேசனும் களம் காண்கிறார். அவர் நடிகராக இல்லாமல் ஒரு பாடலுக்கு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சிக்மா படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே பேலன்ஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதில் நடிகை கேத்தரின் தெரசாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்காக பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் தான் அவர் சந்திப் கிஷன் உடன் இணைந்து நடனமாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே ஜேசன் சஞ்சய் தன்னுடைய சிறுவயதில் தந்தை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் “நான் அடித்தால் தாங்க மாட்ட” பாட்டில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.