லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷனை நாயகனாக வைத்து சிக்மா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜேசன் சஞ்சய் ஒரு பாடலில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் நடனக் காட்சியில் சிறப்பாக ஆடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா
ஜனநாயகன் படத்தோடு விஜய் சினிமாவில் இருந்து வெளியேற அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்குகிறார். அந்த வகையில் லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. முன்னதாக இந்த கதையில் துல்கர் சல்மானை ஜேசன் சஞ்சய் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் துல்கரின் கால்ஷீட் காரணமாக இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அதன் பின் சந்தீப் கிஷன் படத்தில் நாயகனாக நடிக்க இருபப்தாக அறிவிப்பு வெளியானது.
படப்பிடிப்பில் சிக்கல்
லைகா நிறுவனம் தயாரித்த விடாமுயற்சி , இந்தியன் 2 போன்ற பெரிய படங்களின் தோல்வியால் விஜய் மகன் படத்திற்கு பல நெருக்கடி வந்தது. ஆனால் கடைசி வரை பொறுமயாக இருந்து இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்கள். அண்மையில் இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. சிக்மா என இந்த படத்திற்கு தலைப்பு வைத்துள்ளார் சஞ்சய். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கேதரின் டெரசாவுடன் குத்தாட்டம்
சிக்மா படத்தில் ஒரு பாடலுக்கு ஜேசன் சஞ்சய் கேமியோ ரோலில் வந்து நடனமாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தந்தையைப் போலவே இந்த பாடலைல் கேதரின் டெரசாவுடன் நடனத்தில் அவர் மிரட்டியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.