தமிழ் திரைப்படங்களில் தெறிக்கவிடும் அளவிற்கு டான்ஸ் ஆட கூடிய ஹீரோ என்றால் அது இளைய தளபதி விஜய் தான். அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. சில சமயங்களில் டான்ஸ் மாஸ்டர்களுக்கே தண்ணி கட்ட கூடிய ஹீரோ. இந்த வயதிலும் என்னமா டான்ஸ் ஆடுறாரு பாரு என ரசிகர்கள் மட்டுமல்ல, திரை பிரபலங்களே வியக்கும் அளவிற்கு இருக்கும் அவரது ஸ்டெப்ஸ்.
டான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் விஜய் :
நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் பாடல்களிலும் ஏதாவது ஒரு சிக்னேச்சர் ஸ்டேப் நிச்சயமாக இருக்கும். கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் அசால்ட்டாக ஆட கூடிய திறமைசாலி. அதற்கு உதாரணம் தான் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் "ஹலமதி ஹாபிபோ..." மற்றும் " ஜாலியா ஜிம்கானா..." பாடல்கள். உலகமே இந்த பாடல்களுக்கு நடனமாடியது. ஜானி மாஸ்டர் தான் இப்பாடல்களின் கோரியோகிராபர்.
மூன்றாவது முறையாக ஜானி மாஸ்டர் - விஜய் கூட்டணி :
இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் திரைப்படம் "வாரிசு". தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மூலம் முதல் முறையை நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு நடனம் அமைத்துள்ளார் ஜானி மாஸ்டர். மாஸ்டர், பீஸ்ட் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் - ஜானி மாஸ்டர் கூட்டணி மூன்றாவது முறையாக "வாரிசு" திரைப்படம் மூலம் தெறிக்க விட தயாராகிவிட்டார்கள்.
ஜானி மாஸ்டரின் ட்விட்டர் போஸ்ட் :
நடிகர் விஜய்க்கு ஏற்ற ஸ்டைலில் நடனம் அமைப்படத்தில் தேர்ந்தவரான ஜானி மாஸ்டர் தற்போது புதிதாக ட்விட்டர் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். மாஸான ஒரு பர்ஃபார்மன்ஸ் பார்க்க ரசிகர்கள் அனைவரும் தயாராக இருங்கள். விஜய்காரு ஒரு தெறிக்க விடும் நடனத்தை உங்களுக்கு கொடுக்கவிருக்கிறார். தியேட்டரில் யாருமே உட்கார்ந்து பார்க்க போவது இல்லை எனும் ஒரு போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை ஷேர் செய்ததில் இருந்து ரசிகர்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை. மிகவும் ஆவலாக இப்படத்தின் ரிலீஸ்காக காத்து இருக்கிறார்கள். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது. வெயிட் அண்ட் வாட்ச்...