விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் தணிக்கை வாரியத்தின் நடத்தையை விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் விஜய் படத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்தின் பழைய எக்ஸ் தள பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

ஜனநாயகனுக்கு பெருகும் வரவேற்பு

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். இப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய சென்சார் வாரியம் அட்சேபம் தெரிவித்தது. இதனால் படத்திற்கு தணிக்கை சாண்றிதழ் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது படக்குழு. படத்தில் பாதுகாப்பு படையினரின் சின்னங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும். புதிய தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்வையிட்ட பின்னரே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கை வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே படத்தின் புதிய ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் .

ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் தணிக்கை வாரியத்தில் நடத்தை கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துரை பிரபலங்களும் விஜய்க்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். முன்பிருந்ததைக் காட்டிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் 

Continues below advertisement

விஜய் ஆதரவாக ரஜினி பதிவு வைரல் 

விஜய் படங்கள் ரிலிஸீன் போது பிரச்சனை வருவது ஒன்றும் புதிதல்ல. தலைவா , புலி , கத்தி , சர்கார் ஆகிய படங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின் திரையரங்கில் வெளியாகின. 2018 அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகித்த போது  விஜயின் சர்கார் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவை குறிப்பிடும் விதமாக சில காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் படத்திற்கு அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது விஜய்க்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் அவர் "தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்." என கூறியிருந்தார். ஜனநாயகன் படம் குறித்து ரஜினி தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த பழைய பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது