இந்த பொங்கலை தமிழ் சினிமா ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட நினைத்தனர். அதற்கு காரணம் விஜயின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள். ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி ஜனவரி 10 ஆம் தேதியும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால், அந்தந்த நடிகரின் ரசிகர்கள் படத்தை காண மிக ஆவலுடன் இருந்தனர். ஆனால், இப்படி  இடி தலையில் விழும் என்று படக்குழுக்களும், ரசிகர்களும் சில தினங்களுக்கு முன்பு கூட அறிந்திருக்கமாட்டார்கள்.

Continues below advertisement

முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடும் என்ற ஆவலலில், டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும்? யாருக்கிட்ட டிக்கெட் வாங்கலாம் என்றெல்லாம் என யோசிக்கும் நேரத்தில், சென்சார் போர்டு மூலம் ஒரு பிரச்னை வந்து, தற்போது படமே சொன்ன தேதிக்கு வெளியாகமல் போனது. இதில், சின்னபின்னமாக சிக்கியது ஜனநாயகன்தான். 

ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?

வழக்கு, தடை என ஏகப்பட்ட சிக்கல்கள் வர கடைசியில் படம் சொன்ன தேதியில் வெளியாகமல் போனது மட்டுமல்லாமல், எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாதது இன்னும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

Continues below advertisement

கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன ‘பராசக்தி’

ஜனநாயகன் படத்துக்கு மட்டும்தான் சிக்கல் என எண்ணிக்கொண்டிருக்கையில், பராசக்திக்கும் வந்தது பெரிய ஆப்பு என நினைத்தோம். ஆனால், கடைசி நேரத்தில் வெளியீட்டு தேதியை உறுதி செய்தது. சென்சார் போர்டு சொன்ன 25 இடங்களில் வசனங்களை நீக்கி படத்தை வெளியிடுகிறது. இப்படி ஒரு பஞ்சாயத்தா போய் தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய  படங்கள் ரிலீஸ் செய்ய இவ்வளவு நெருக்கடியா? என்று கோலிவுட் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.

அன்றே சொன்ன ‘வி’ எழுத்து நடிகர்

ஒரு படத்தை வெளியிட தணிக்கைக்குழு சான்று என்பது மிகவும் அவசியம். அவர்கள் அனுமதி அளித்தால்தான் எந்த மொழி படமும் உலகம் முழுவதும் வெளியாகும். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த அமைப்பு இந்த சென்சார் போர்டு. இந்த அமைப்பு நினைத்தால் எந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும், அனுமதி கொடுக்காமல் இருக்கவும் முடியும். ஆனால், தணிக்கைகுழுவில் உள்ள சிலரால் ஊழலும் நடந்துள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

ஆமாம், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால், இது தற்போது இல்லை கடந்த 2023 ஆண்டில் இதனை அந்த ஹீரோ படத்தை வெளியிட அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக வெளிப்படையாக தெரிவித்தார். அப்போது, அவரது ஊழல் குற்றச்சாட்டு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 ‘வி’ எழுத்து கொண்ட பிரபல தமிழ் ஹீரோ, “திரைப்படங்களில் ஊழலைக் காட்டுவது சரி. ஆனால் நிஜ வாழ்க்கையில் அல்ல. இதை ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக அரசு அலுவலகங்களில். இதைவிட மோசமான விஷயம். மராட்டிய தலைநகரில் உள்ள சென்சார் போர்டு  அலுவலகத்தில் இது நடக்கிறது” என்று கூறினார்.

’பாட்ஷா’ வில்லன் பெயர் கொண்ட படத்தின் ஹிந்திப் பதிப்பிற்காக 6.5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டு தவணைகளாக. திரையிடலுக்கு ரூ.3 லட்சம் மற்றும் சான்றிதழுக்கு 3.5 லட்சம். என் திரை வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை. படம் ரிலீஸ்க்காக பணம் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர், பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்றார். “நான் எனக்காகச் செய்யவில்லை, எதிர்காலத் தயாரிப்பாளர்களுக்காகவே செய்கிறேன். இது நடக்கவே கூடாது. கடினமாக உழைத்த பணம் ஊழலுக்குப் போகிறதா? கேள்வி எழுப்பினார்.