தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்' நாளை ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிப்பு முதல் ரிலீஸ் வரை பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது .
ஜனநாயகன்கடந்துவந்தபாதை
அறிவிப்பு
விஜயின் கடைசி படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் 2024 செப்டம்பர் 1-ஆம் தேதி இயக்குநர் எச். வினோத் - விஜய் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2025 டிசம்பர் 2 அன்று மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கியது.
ஃபர்ஸ்ட்லுக்வெளியீடு
2026 புத்தாண்டை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
தணிக்கைக்குவிண்ணப்பம்
டிசம்பர் 18 அன்று தணிக்கைக்காக படம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 2026 ஜனவரி 9 அன்று பொங்கல் வெளியீடாக வர இருந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் இது படத்தின் ரிலீஸை கூடுதலாக தாமதப்படுத்தியதால் தயாரிப்பு நிறுவனம் தங்களது மனுவை திரும்ப பெற்றது.
ஆடியோலாஞ்ச்
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது. மலேசியாவில் உள்ள புகிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து கிட்டதட்ட 85 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். மலேசியாவில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்கிற கின்னஸ் சாதனையை ஜன நாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி படைத்தது.
இணையத்தில்லீக்
படத்தின் ரிலீஸ் தாமதமானதால் ஏற்கனவே மனவருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி வந்து சேர்ந்தது. ஜனநாயகன் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. முதலில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் நள்ளிரவில் முழு படமும் இணையத்தில் வெளியானது. இது இந்தியளவில் மிகப்பெரிய பேசுபொருளானது. இணையத்தில் மட்டுமே கிட்டதட்ட ஒரு கோடி பேர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துள்ளார்கள்.
A சான்றிதழ்
இத்தனை சவால்களை கடந்து கடந்து ஜூலை 9 ஆம் தேதி ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியது. தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை சவால்களை கடந்து வந்த போதும் ஜனநாயகன் படத்திற்கு மக்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. உலகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவு நடந்து வரும் நிலையில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து வருகின்றன.
படக்குழுபற்றி
எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சர்ச்சை, நீதிமன்ற வழக்கு, வெளியீட்டு தாமதம் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இறுதியாக ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.
