நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் கிடைக்க ஏற்பட்ட தாமதம் காரணமாக படமானது ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இருந்து ஜனநாயகனுக்கு ஆதரவாக பேச தொடங்கியுள்ளனர்,
சிக்கலை கிளப்பிய சென்சார் போர்டு:
நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படமானது ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தில் சில காட்சிகள் ஆட்சேபனைக்குறியதாக இருந்ததால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில் படக்குழுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தது.
வழக்கு விசாரணை;
இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது அதே நாளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
குரல் கொடுத்த பிரபலங்கள்:
ஜனநாயகன் படம் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து ஜனநாயகன் படத்திற்கு சப்போர்ட் செய்துள்ளார். இது குறித்த அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர், எந்தவொரு படமும் ஒரு நபரைப் பற்றியது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மக்களின் முயற்சிகளும், ஒரு படம் திரைக்கு வருவதற்கு பணமும் தேவை, படக்குழுவுக்கு எனது ஆதரவு, இது தளபதியின் கடைசிஇது எப்போது வெளியானாலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம்!! தலைவன் படம் எப்போ ரிலீஸ் ஓ அப்போ தியேட்டர் பக்கம் போறேன்! என்று பதிவிட்டுள்ளார்.
டீசல் பட இயக்குனரான சண்முகம் முத்துசாமியும் காட்டமாக வெளியிட்டுள்ள பதிவில் பாஜக முடிவு பண்ணிட்டாய்ங்க … நாம 2026 தேர்தல்ல தோக்கப்போறது உறுதின்னு தெரிஞ்சுப்போச்சு….அதனால முடிஞ்ச அளவுக்கு தன்னோட கூட்டணிக்கு வராத விஜய் அவர்களின் கதையை முடிச்சுவிட பாஜக பாக்குறாங்க ஒரு சினிமாக்காரனா இந்த 10 நாள் திரையரங்க வசூல் திரைத்துறைக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியும்…! என் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி, நான் செய்கின்ற தொழில் சினிமா அதற்கு ஒரு சிக்கல் வருகிறது போது ஆதரவாக நிற்க வேண்டியது என் கடமை…!பாப்போம் தனது அரசியல் பயணத்துக்கு இடையூறு செய்யும் பாஜகaவை விஜய் அவர்கள் எவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறார் என்று….? பதிவிட்டுள்ளார்.
இவர்கள் மட்டுமன்றி நடிகர் கிஷன் தாஸ் மற்றும் இயக்குனர் ரத்னா குமார் ஆகியோரும் ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் ஜனநாயகன் படமானது ஐரோப்பிய நாடுகளில் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகாது என்று விநியோகஸ்தர்கள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.