தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அவரது கடைசி படமான ஜனநாயகன் மீது பல மடங்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Continues below advertisement

ரசிகரை உற்சாகப்படுத்திய விஜய்:

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் விஜய்யின் ரசிகர்கள் கூடும் இந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து வருகிறது. விஜய் மலேசியாவிற்கு வந்திருப்பதால் அங்குள்ள தமிழர்களும், விஜய்யின் ரசிகர்களும் அங்கு பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். 

விழா மேடையில் இருந்த விஜய்யின் முன்பு இருந்த ரசிகர் ஒருவர், தலைவா 2026 நம்மதுதான் என்று உற்சாகத்துடன் கத்தினார். அப்போது, அந்த ரசிகரை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து அந்த ரசிகரிடம் விஜய் கைகொடுத்து உற்சாகப்படுத்துவார். 

Continues below advertisement

ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்:

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் நடக்கும் இந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனத்தினர், படத்தின் இயக்குனர் எச்.வினோத், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் இயக்குனர்களான அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். 

விஜய்யின் கடைசி படமான இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே மட்டுமின்றி மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.